டீக்கடையில் இரண்டு டீ சொல்லிவிட்டு வெளியில் வந்து நின்றான் மணி...மணியுடன் அவனுடைய நண்பன் ரகுவும் இருந்தான்.. வீட்டில் இருந்து கிளம்பும் போது போன் பேச ஆரம்பித்தவன், பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் "47" "பெசன்ட் நகர்" பேருந்து மூன்று போய்விட்டது இன்னும் பேசிக் கொண்டிருந்தான்...
அலுவலகத்தில், கூட பணிபுரியும் பெண் என்று, அவன் பேசுவதில் இருந்து ஊகித்து அறிந்தான் மணி..
மணிக்கு, அவர்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்றியது... ஆனால் கண்டுக் கொள்ளாதது போல், டீக்குடித்து விட்டு அருகில் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்...
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு"சரி விடு.. நானே விட்டுத் தரேன்.. ஏன்னா விட்டுக் கொடுக்குறவங்க கெட்டுப் போக மாட்டாங்க..." ரகு போனில் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்...
அவள் அடுத்து என்ன சொன்னாள் என்று தெரியவில்லை ரகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான்...
அவள் அப்படி என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், அவனாகச் சொல்வதற்காகக் காத்து கொண்டிருந்தான் மணி...
ஆனால், அவன் சொல்வதாகத் தெரியவில்லை.. ஆதலால் மணியே கேட்டான்... என்ன டா ஆச்சு.. அவ என்ன சொன்னா.. அமைதி ஆயிட்ட..?
இவன் " விட்டுக் கொடுக்குறவங்க கெட்டுப் போகமாட்டாங்க" என்று சொன்னதற்கு அந்தப் பெண் சொல்லி இருக்கிறாள்..
"பசங்க நீங்க விட்டுக் கொடுத்த கெட்டுப் போகமாட்டிங்க .. ஆனா பொண்ணுங்க நாங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் கண்டிப்பா கெட்டுப் போய்டுவோம்.."
மணிக்கு இதைக் கேட்டதும் சுளீர் என்றிருந்தது... பேசாமல் கேட்காமலே இருந்திருக்குலாம் எனத் தோன்றியது..
வீட்டை அடையும் வரை மணியும் ரகுவும் பேசிக் கொள்ளவேயில்லை...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment