கழுத்தில் மஞ்சள் தடங்களைப் பதித்திருந்த தாலி...! நெற்றியில் குவிந்திருந்த குங்குமம்...! கால் விரல்களின் இடுக்குகளில் நெளிந்து கொண்டிருந்த மெட்டி...!
தொப்பை என கிண்டல் செய்த இடத்தில், கருவொன்று கர்வமாய்...!!! அவள் கர்ப்பமாய்...!!!
அவள் அழவில்லை ஆனால் கண்களில் கண்ணீர்... அவன் சிரிக்கவில்லை ஆனால் உதடுகளில் புன்னகை...
எத்தனை நாள் ஆகிவிட்டது இவளை சந்தித்து... குழந்தைப் போல் இருந்தவள் இன்னும் சில மாதங்களில் குழந்தைப் பெற போகிறாள்... ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் இருந்தான் மணி..

இவ்வளவு அவசர அவசரமாக ஓடி, யாரை சந்திக்கப் போகிறது..? எதைச் சாதிக்கப் போகிறது..? என்று காலத்தின் மீது கோபமும் கொண்டான்...
வெகு நாட்களுக்குப் பின் விழுந்த முதல் மழைத் துளி, மடிந்து கிடக்கும் மண்ணின் மணத்தை முழுவதுமாகத் தூண்டுவதைப் போல, நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவளை சந்தித்த வேளையில், மணியின் மனதில் கேட்பாரற்று பூட்டிக் கிடந்த நினைவு புதையல்கள் மீண்டுமொரு முறை கிளர்ந்து எழுந்தன...
பள்ளி, கல்லூரி, வேலை என்று தன் பழங்கால நினைவுகளில் எங்கு கால் வைத்தாலும் அவளின் கால் தடமும் கூடவே வரும்... அதை பல சமயங்களில் அவன் ரசித்திருக்கிறான்...
வைரமுத்துவின் வரிகளைப் போல, பிரிவொன்று நேருமென்று தெரிந்தும், அவளின் மீதான பிரியத்தை மணி குறைத்துக் கொண்டதே இல்லை...
ஆனால் அவளின் திருமணத்திற்குப் பிறகு எல்லாமே மாறிப் போனது.. திருமணம் நடக்கும் போது அருகில் இருந்தவள் திருமணம் முடிந்தவுடன் தொலைவில் சென்றுவிட்டாள்... தொலைவு சென்றதும் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது..
பெண் என்பவள் தங்கையானாலும், தோழியானாலும் திருமணம் ஆனதும் ஏற்படும் அந்த இயல்பான இடைவெளியை அவனால் எளிதில் ஏற்கவும் இயலவில்லை.. கடக்கவும் முடியவில்லை...
ஒருவருட இடைவெளிக்கு பிறகு அன்று தான் அவளை பார்க்கிறான் மணி... குறும்புத் தனம் குறையாத அவள், குடும்ப பெண்ணாகப் பொறுப்பேற்றிருந்தாள்...
வாங்கி வந்த பழங்களையும், இனிப்பு காரங்களையும் அவள் கைகளில் கொடுத்தான்.. எதுக்கு மணி, இதெல்லாம்... என்று சந்தோசமாக சலித்துக் கொண்டே உள்ளே எடுத்துச் சென்றாள்...
டீ வைத்து கொடுத்தாள்.. பேசிக் கொண்டே அம்மாவின் உதவியுடன் சீக்கிரமாக சமையல் வேலையும் முடித்து விட்டாள்...
சமைத்து முடித்ததும் அவனை சாப்பிட சொன்னாள்.. மணி எவ்வளவோ மறுத்து பார்த்தான்.. ஆனால் அவள் வற்புறுத்துவதை நிறுத்தவில்லை... அதனால் சாப்பிட உட்கார்ந்தேன்...
அவள் பரிமாறினாள்.. நீயும் ஒரு தட்டு எடு.. ஒன்றாக சாப்பிடலாம் என்றான் மணி..
இல்லை மணி... அவர் பசியோடு வருவார்.. அவர் வந்ததும் நான் அவரோடு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டாள்... அவனுக்கு சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை... இருந்தாலும் தனது தோழி, தான் ஆசைப்பட்டு கட்டிக் கொண்ட கணவனுக்காகப் பாசமான மனைவியாக மாறியிருப்பதில் அவனுக்கு பெருமிதமாக இருந்தது...
சாப்பிட்டு சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, புகுந்த வீட்டில் மகளை விட்டுச் செல்லும் தந்தையைப் போல, அவளை சந்தோசமாக இருக்கும்படி கூறிவிட்டு நினைவுகளை சுமந்து கொண்டு மணி கிளம்பினான்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment