பழைய அலுவலகத்தில் பணிபுரிந்த மிக நெருங்கிய நண்பன் ஒருவன் மணிக்கு போன் செய்திருந்தான். அவனிடம் பேசி வெகு நாட்கள் ஆயிருந்ததால் மிகுந்த உற்சாகத்துடன் போனை எடுத்தான் மணி...
பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின், அந்த நண்பன் "தி.நகர் பேருந்து நிலையம் வரை இப்பொழுது போக முடியுமா" என்று கேட்டான். மணி தி.நகரில் தான் வசிக்கிறான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மணியும் ஏன்..? எதற்கு.? என்று கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பிட்டு போகட்டுமா என்று கேட்டான்.
சரியென்று.. போனைத் துண்டித்துவிட்டு, சாப்பிட்டு எழுந்தான் மணி.. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். நடப்பது போல் ஓடினான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்..
தி.நகர் பேருந்து நிலையத்தை அடையும் போது, அதிர்ச்சி கலந்த ஆனந்த ஆச்சரியம்...
மணியின் நண்பனே அந்த இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்..
இருவரும் தன்னிலை மறந்து சாலையிலேயே கட்டித்தழுவி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்..
இறந்த காலங்கள் இருள் விலக்கி வந்தன.. இருவரும் தங்கள் பழைய நினைவுகளை ஒன்றாகத் தேடினர்.. தேடிய நினைவுகளில் தேநீருடன் தொலைந்தனர்.. காற்றலை அவர்களின் சிரிப்பொலியை கன்னாபின்னமாக கசியவிட்டது...
தேநீர் தீர்ந்தது... சிரிப்பு சத்தமும் குறைந்தது... அவன் நண்பன் நேரமாகிவிட்டது என்று கிளம்பினான்.. மணியின் கண்களில் கணிசமான அளவு கண்ணீர் கசிந்திருந்தது...
எல்லாவற்றையும் நினைத்து சோகத்தில், கண்கள் அழும்போதெல்லாம் உதடுகள் மறந்தும் புன்னகையை உதிர்ப்பதில்லை ஆனால் எல்லாவற்றையும் மனதார நினைத்து உதடுகள் சிரிக்கும் போது மட்டும் , கண்கள் கண்ணீர்த் துளிகளைக் கசக்கி விடுகின்றன...
இந்த விந்தையை எண்ணி வியந்துக் கொண்டே வீட்டிற்குத் திரும்பினான் மணி...
கார்த்திக் பிரகாசம்...

அவனும் பொறுமையாகப் போங்கள்.. என் நண்பன் ஒருவன் வருவான்.. அவன் ஒரு புத்தகம் தருவான்.. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து பின்பு வாங்கிக் கொள்கிறேன் என்றான்.. அவன் எப்பொழுதுமே மணியை "கள்" போட்டுத் தான் பேசுவான்...
சரியென்று.. போனைத் துண்டித்துவிட்டு, சாப்பிட்டு எழுந்தான் மணி.. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். நடப்பது போல் ஓடினான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்..
தி.நகர் பேருந்து நிலையத்தை அடையும் போது, அதிர்ச்சி கலந்த ஆனந்த ஆச்சரியம்...
மணியின் நண்பனே அந்த இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்..
இருவரும் தன்னிலை மறந்து சாலையிலேயே கட்டித்தழுவி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்..
இறந்த காலங்கள் இருள் விலக்கி வந்தன.. இருவரும் தங்கள் பழைய நினைவுகளை ஒன்றாகத் தேடினர்.. தேடிய நினைவுகளில் தேநீருடன் தொலைந்தனர்.. காற்றலை அவர்களின் சிரிப்பொலியை கன்னாபின்னமாக கசியவிட்டது...
தேநீர் தீர்ந்தது... சிரிப்பு சத்தமும் குறைந்தது... அவன் நண்பன் நேரமாகிவிட்டது என்று கிளம்பினான்.. மணியின் கண்களில் கணிசமான அளவு கண்ணீர் கசிந்திருந்தது...
எல்லாவற்றையும் நினைத்து சோகத்தில், கண்கள் அழும்போதெல்லாம் உதடுகள் மறந்தும் புன்னகையை உதிர்ப்பதில்லை ஆனால் எல்லாவற்றையும் மனதார நினைத்து உதடுகள் சிரிக்கும் போது மட்டும் , கண்கள் கண்ணீர்த் துளிகளைக் கசக்கி விடுகின்றன...
இந்த விந்தையை எண்ணி வியந்துக் கொண்டே வீட்டிற்குத் திரும்பினான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment