Skip to main content

சோளிங்கர்...

சோளிங்கர் நரசிம்மர் கோவிலைப் பற்றி நண்பர்கள் யார் மூலமாகவோ கேள்விப்பட்டது. கேள்விப்பட்ட நாள் முதலே அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் மனதுக்குள் உயிர்ப்புடனே இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பின், நேற்று தான் செல்லும் வாய்ப்பு வாய்த்தது. நண்பர்கள் சிலரும் உடன்பட திட்டமும் பயணமும் இனிதே நிறைவேறியது.

அரக்கோணத்தில் இருந்து 30 கி.மீ. அரசுப் பேருந்தில் 10 ரூபாய். தனியார் பேருந்தில் 13 ரூபாய். நாங்கள் சென்ற சமயம் ஒரேயொரு தனியார் பேருந்து மட்டும் தான் நின்றுக் கொண்டிருந்தது. அடுத்த பேருந்து சோளிங்கருக்கு எப்பொழுது என்று நடத்துனரிடம் கேட்டவுடன் அவர், "அடுத்து பேருந்து இது தான்.. கிளம்ப இன்னும் அரைமணி நேரம் ஆகும்" என்று கூறினார்.. என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மொத்தம் எத்தனை... எட்டா..?" என்று கேட்டுவிட்டு டிக்கெட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டார்... வேறு வழியில்லாமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.. வெயில் தன் வேலையை செம்மையாக செய்து கொண்டிருந்தது.

ஏறி உட்கார்ந்த பத்தாவது நிமிடத்தில் அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது.. "அடப்பாவி .." என்று நடத்துனரைத் திட்டிக் கொண்டே பேருந்தில் காத்திருந்தோம்.. 45 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து கிளம்பியது..40 நிமிட பயணத்திற்குப் பின் கோவிலை அடைந்தோம்.

கோவிலுக்கு அனைவரையும் வரவேற்பது போல, தெருவின் தொடக்கத்திலேயே பிரம்மாண்ட உயரத்தில் ஆஞ்சநேயர் இருகரம் கூப்பி நின்றுக் கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நரசிம்மரை தரிசிக்கச் சென்றோம்...

மொத்தம் 1305 படிக்கட்டுக்கள். அனைத்தும் நீண்ட வாக்கில் இருந்தன. படிக்கட்டுகள் முடியும் வரையிலும் வெயிலின் உஷ்ணம் உள்ளே இறங்காதவாறு மேற்கூரை போடப்பட்டிருந்தது.. அதனால் வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிக்கட்டிலும் குறைந்தது நாலைந்து குரங்குகளாவுது இருந்தன. அதன் பிறகு தான், கவனித்து பார்த்தால் படி ஏறுபவர்கள் இறங்குபவர்கள் என அனைவருமே, குரங்கை விரட்டுவதற்காக கையில் கோல் வைத்திருந்தனர்.. கோல் விற்கும் கடைக்கூட கீழே இருந்தது.. நாங்கள் தான் பெரிய வீராப்பாக "அதெல்லாம் வேண்டாம்" என்று வந்துவிட்டோம்.. பின்பு கொஞ்சம் பயமாக இருந்தது.. ஆனால் எப்படியோ சமாளித்து விட்டோம்..

ஏதேதோ கதைகளைப் பேசிக் கொண்டும், சக நண்பர்களை கிண்டல் செய்து கொண்டும் சென்றதால் ஏறியதே தெரியவில்லை.. 40 நிமிடங்களுக்குள் உச்சியை அடைந்து விட்டோம்.. நாங்கள் ஏறிய சமயத்தில் கூட்டம் அதிகம் இல்லை. ஆதலால் சிறிது நேரத்திலேயே மிகுந்த மனநிறைவுடன் நரசிம்மரை தரிசித்து முடித்துவிட்டோம்.

ஆனால் கோவிலுக்குள்ளும் குரங்குகள் நிறைய இருந்ததால், அதிக நேரம் அமர முடியவில்லை. உடனே கீழே இறங்கிவிட்டோம்.

அரக்கோணத்தில் ரயிலில் அமர்ந்த போது, அத்தனைப் படிக்கட்டுகள் ஏறி இறங்கிய அலுப்பேத் தெரியவில்லை. மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருந்தது.அதே மகிழ்ச்சியும் நிம்மதியும் நண்பர்களின் மனதிலும் எதிரொளிப்பதை, அவர்களின் கண்களில் காண முடிந்தது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...