தன் வாழ்ந்த கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர வேறெந்த சிறு எண்ணத்தையும் கொண்டிருக்காத தன்னலமற்ற தியாகி.. வீரத்தையும் தியாகத்தையும் எப்பொழுதுமே விரல் நுனியில் வைத்திருந்த மாபெரும் போராளி...23வது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காகத் தூக்கு மேடையில் புன்னகையுடன் தன் இன்னுயிரை ஈன்ற வீரன்...
என்.சொக்கன் அவர்கள், பகத் சிங்கின் பிறப்பு முதல் இறுதி வரை, அவருடைய ஆயுதப் போரட்டத்தின் மீதான நம்பிக்கை, அதற்காக அவர் மேற்கொண்ட கிளர்ச்சிகள் என அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியையும் உணர்ச்சிப் பொங்க எழுதி இருக்கிறார்.. அந்த உணர்ச்சிகரமான வரிகள், புத்தகம் படிப்பவர்களை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கத் தூண்டுகின்றன..
அந்தப் போராளியை பற்றியும், அவருடைய துணிச்சலான போராட்டங்களையும், வீரம் தூண்டும் எழுத்துக்களைப் பற்றியும் படிக்கும் போது மெய்ச் சிலிர்க்கின்றன.. மேலும் அவர்க்குண்டான மரியாதையை நாம் போதிய அளவில் செய்யவில்லையோ என்ற அச்சத்தையும், கேள்வியையும் மனதில் ஏற்படுத்துகின்றன...
மொத்தத்தில் ஒரு மகத்தான போராளியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தறிந்து கொண்ட மகிழ்ச்சி.. இன்றைய நாள் நல்ல முறையில் செலவிடப்பட்டது என்ற மனத்திருப்தி, இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment