விவரம் தெரிந்த நாள் முதல் நித்யா, தன் நிறத்தை நினைத்து வருந்தி அழாத நாள் இல்லை.. அவளது சகோதரிகள் மூவரும் சிவப்பாய் இருக்க, இவள் மட்டும் கருப்பாய் பிறந்து கருப்பாய் வளர்ந்தாள். அவளது சகோதரிகளுக்கு நிறைய நண்பர்கள்.. எப்பொழுதும் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.ஆனால், நித்யா தனித்தே இருந்தாள். அவளுக்கு உண்மையான நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவள் கருப்பு நிறத்தில் இருந்ததனால், அவளிடம் பேசவோ பழகவோ யாரும் அண்டியதில்லை. அதற்கு அவளது சகோதரிகளுமே ஒரு முக்கிய காரணம். சகோதரிகளே அவளை பாகுபாட்டோடு தான் பார்த்தனர். தங்கள் நண்பர்களின் முன் வந்தால், தன் தங்கையென சொல்ல நேர்ந்தால் தங்களுக்கு அகௌரவமாகப் போய்விடும் என்று அவளை ஒதுக்கினர். ஒதுக்கியது மட்டுமில்லாமல் அவளின் காதுபடவே பலமுறை கூறி இருந்தனர். அதனால் நித்யாவும் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனித்தே வளர்ந்தாள். தனித்தே வளர்ந்ததால் நண்பர்கள் இல்லை. அந்த வருத்தத்தை புத்தங்களின் மூலம் தீர்த்துக் கொண்டாள் நித்யா. புத்தகங்களையே தன் நண்பர்களாக்கி கொண்டாள். அவள் பேசுவதும் பழகுவதும் புத்தகங்களுடன் மட்டும்தான். பகிர்ந்துக் கொள்ள நண்பர்கள் இல்லாததால் தனத...