ரூமிற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் போத்திஸ் ஹைபர் கடைக்குப் போகிறேன் வரியா என்று நண்பன் கேட்டேன்... "சரி.. அந்தக் கடைக்கு போனால் ஏசியில் கொஞ்ச நேரம் உலாத்தலாமே" என்று நானும் கிளம்பிவிட்டேன்...
கடைக்குள் போனதும் அவன் வீட்டு உபயோக பொருட்கள் தளத்தில் வேண்டிய பொருட்களைத் தேடி தேடி வாங்கிக் கொண்டிருந்தான்...நான் வழக்கம் போல "எதெல்லாம் என்னால் இப்போதைக்கு வாங்க முடியாதோ" அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...
எல்லாவற்றையும் சேகரித்து கடைசியாகப் பில் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒலிப்பெருக்கியில் ஒரு அறிவிப்பு வந்தது.. அந்த அறிவிப்பு சிறிது ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது.
"போத்திஸ் ஹைபர்" வாடிக்கையாளர்கள், தங்கள் பில்லைக் காட்டி தரைத்தளத்தில் மரக்கன்று ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தான் அது...!!
தரைத் தளத்தில் வந்து பார்த்தால், மக்கள் கூட்டமாகத் தங்கள் பில்களைக் காட்டி மரக்கன்றைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அது ஒரு நீண்ட வரிசையாகப் பெருகிக் கொண்டும் இருந்தது..
"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" "இயற்கையைப் பாதுகாப்போம்" என்று வசனத்தை மட்டும் நம்மில் பெரும்பாலனோர் பேசிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு முன்னணி வர்த்தக நிறுவனம் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதேப் போல் மக்களும், "மரக்கன்று தானே.! இதற்குப் போய் வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டுமா..! அந்த நேரத்தில் பேருந்தையோ அல்லது ரயிலையோ பிடித்தால், வீட்டிற்கு சென்று விடலாம் என்று ஏளனமாக நினைக்காமல், நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து தங்களுக்கு பிடித்த மரக்கன்றை வாங்கி சென்றது நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகத் தோன்றியது..
வர்த்தக நிறுவனங்கள் இதுப் போன்ற சமூக அக்கறையை கையில் எடுத்துக் கொண்டால், அவர்களின் வியாபாரத்திற்கும் அதை விட பெரிய விளம்பரம் தேவையாக இருக்காது. சமூகத்திலும் ஆரோக்கியமான முன்னேற்றத்துடன் கூடிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment