அவருக்கு 80 முதல் 83 வயதுக்குள்ளிருக்கும். எப்பொழுதும் சிரித்த முகம் தான். அவருடைய கண்கள் இந்த வயதிலும் மூக்கு கண்ணாடியின் உதவியில்லாமலே இயங்குகின்றன. அவருடைய கால்களும் துணை தாங்கி ஏதும் இல்லாமல், அடி பிறளாமல் அடி எடுத்து வைக்கின்றன.
காலை 3 55 மணிக்கெல்லாம் டீக்கடைக்கு வந்து விடுகிறார்.. கடையே 4 மணிக்குத் தான் திறப்பார்கள்.
அந்தக் கடையிலும் அவர் குடித்த டீக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம், தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், இவருக்கும் சேர்த்து அவர்களே பணம் கொடுத்து விடுகின்றனர்.
அவர் உடலில் டீ ஓடுகிறதோ ரத்தம் ஓடுகிறதோ, மொத்தத்தில் அந்த "டீயும் டீக்கடையும்" தான் அவரை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன...
கார்த்திக் பிரகாசம்...
காலை 3 55 மணிக்கெல்லாம் டீக்கடைக்கு வந்து விடுகிறார்.. கடையே 4 மணிக்குத் தான் திறப்பார்கள்.
பெஞ்சை எல்லாம் எடுத்து வரிசையாகப் போட்டு கடை பையனுக்கு உதவி செய்கிறார். கடையில் வேலை செய்யும் பையன் முதல் கடைக்கு வருபவரெல்லாம் நண்பர்கள் தான் அவருக்கு. கடையில் விசாரித்ததில் ஒரு நாளைக்கு குறைந்தது 9 முதல் 10 முறையாவுது வந்து விடுவார் என்கிறார்கள். அவர் ரத்தத்தில் டீக் கலந்திருக்கிறதா அல்லது டீயில் ரத்தம் கலந்துவிட்டதா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் தான். உடலில் ரத்தத்திற்காகப் பதிலாக "டீ"யும், வெள்ளை அணுக்களுக்குப் பதிலாக டிக்காசனும் சிகப்பு அணுக்களுக்குப் பதிலாக சக்கரையும் தான் ஓடிக் கொண்டிருக்கும் போலிருக்கிறது.
அந்தக் கடையிலும் அவர் குடித்த டீக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம், தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், இவருக்கும் சேர்த்து அவர்களே பணம் கொடுத்து விடுகின்றனர்.
அவர் உடலில் டீ ஓடுகிறதோ ரத்தம் ஓடுகிறதோ, மொத்தத்தில் அந்த "டீயும் டீக்கடையும்" தான் அவரை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment