ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்குச் செல்லும் போதும், என்னென்ன புத்தங்கங்கள் வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்த பட்டியலுடன் செல்வேன். ஆனால் பெரும்பாலும் குறிப்பு எடுத்த புத்தங்கங்கள் கிடைக்காமல் அல்லது வாங்க முடியாமல் புதிதாக வேறு புத்தகங்களினால் கவரப்பட்டு அந்தப் புத்தகங்களையே வாங்கி விடுவேன். இன்றும் அப்படியே ஆயிற்று. "கி.ரா" எழுதிய "கன்னிமை"யையும், "யூமா.வாசுகி" எழுதிய "ரத்த உறவுகள்" புத்தகத்தையும் வாங்கச் சென்றேன். ஆனால் நான் வழக்கமாக செல்லும் கடையில் இந்த இரண்டு புத்தகங்களுமே இல்லை. கடைசியில் சுந்தர ராமசாமியின் புத்தகங்களை வாங்கி வந்துவிட்டேன்.
புத்தகங்கள் வாங்கியது நிறைவாக இருந்தாலும் நினைத்த புத்தங்கங்கள் கிடைக்காமல் திரும்பும் போது, விவரம் தெரிந்து பதினைந்து வருடங்களாக புத்தக வாசிப்பே இல்லாமல் வளர்ந்திருக்கிறேன் என்ற உண்மையை நினைக்கும் போதெல்லாம் மனம், வருத்தத்தின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுகிறது.

கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment