Skip to main content
டீக்கடையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.. அவனுடைய போன் ஒலித்தது.. அவன் முகச்சுளிப்புடன் போனை அனைத்து விட்டு மீண்டும் நண்பர்களோடு பேச ஆரம்பித்தான்.. சிறிது நேரத்தில் மீண்டும் போன் ஒலித்தது.. இந்த முறை எரிச்சல் அடைந்தான் கார்த்திக்... அவன் நண்பர்கள் வேறு, போன் பேச வற்புறுத்தினர்.. இது இன்னும் அவனுக்கு எரிச்சலை தந்தது.. ஏனென்றால் போன் செய்து கொண்டிருப்பது அவனுடைய அம்மா...

கார்த்திக் வேலைக்கென்று சென்னை வந்து முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இருந்தாலும் அவன் அம்மா ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தாறு முறையாவுது போன் செய்து விடுவார்.. காலையில் விழித்து டீக்குடிப்பது முதல் இரவு சாப்பிட்டு தூங்கும் வரை அனைத்தையும் போனிலேயே கேட்டறிந்து கொண்டு அடுத்ததை செய்ய சொல்வார்.. இது கார்த்திக்கு ஒருவிதமான எரிச்சலை தந்தது. தன்னை இன்னும் சிறுவனாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்வான்..

நண்பர்கள் வற்புறுத்தியதில் எரிச்சல் அடைந்த கார்த்திக், போனை எடுத்தான்.. எடுத்த எடுப்பிலேயே தன் எரிச்சலை அம்மாவிடம் எறிந்தான்..

"..எதற்கு இத்தனை முறை போன் செய்து கொண்டே இருக்கிறீர்கள்.. நான் என்ன சின்ன பையனா... என்னை சுதந்திரமாக இருக்கவே விட மாட்டீர்களா..? இனிமேல் அடிக்கடி எனக்கு போன் செய்யதீர்கள்... நானே செய்கிறேன் அப்பொழுது பேசிக் கொள்ளலாம்.. அதுவே போதும்...!!! என்று ஏகத்துக்கும் பேசி விட்டான்.. எதிரில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை..

அடுத்து சில நாட்கள் வீட்டில் இருந்து போன் வரவில்லை.. அவனும் போன் செய்யவில்லை.. கார்த்திக் ரொம்ப சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டான்.. யாருக்கும் எதுவும் தினசரி ஒப்புவிக்க தேவையில்லை என்று சந்தோசமாகத் திரிந்தான். நிமிடங்கள் நாட்களையும், நாட்கள் வாரங்களையும் நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தன..

ஒருநாள் கார்த்திக்கு திடீரென காய்ச்சல் வந்தது.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. வீட்டில் இருந்தும் போன் இல்லை. மாத்திரை வாங்கிக் கொடுக்கக் கூட ஆள் இல்லை.. சுதந்திரமாக அவன் நினைத்தது இப்பொழுது சுமையாகத் தெரிந்தது.. தினந்தோறும் ஏற்படும் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய பல அனுபவங்கள் அவனிடம் கேட்க ஆள்இல்லாமல் தேங்கி கிடந்தன.. சுதந்திரமாக நினைத்தது அவனை தனியொரு தனிமை சிறையில் அடைத்துவிட்டதாய் உணர்ந்தான்..

உடனே போன் செய்து அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனது கதறியது.. ஆனால் ஏதொரு மனோபாவம் அவனை போன் செய்ய விடாமல் தடுத்தது.. தயக்கமும் வெட்கமும் மாறி மாறி வதப்படுத்தின.. சில மணி நேர போராட்டங்களுக்குப் பின் போன் செய்தான்...

அம்மா.. எனக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் தான் சொன்னான்... உடனே எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை, சாப்பிட வேண்டிய உணவு என்று பதறிப் போய் சொன்னார் அவன் அம்மா... அடுத்த அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, உடம்பு எப்படி இருக்கிறது..? சாப்பிட்டாயா...? வாந்தி நின்று விட்டதா.? இன்னும் நிற்கவில்லை என்றால் இந்த மாத்திரை சாப்பிடு.! என்று அவன் அம்மா போன் செய்துக் கொண்டே இருந்தார்..

அம்மாவின் கவனிப்பிலேயே கார்த்திக்கின் பாதி காய்ச்சல் கரைந்தது... அம்மாவிடம் கேட்ட மன்னிப்பில், அவள் மன்னித்ததில் மீதி காய்ச்சலும் பறந்தது.. தானே தேடிக் கொண்டே தனிமையில் இருந்து மீண்டு வந்தான் கார்த்திக்... இப்பொழுதெல்லாம் அம்மா போன் செய்வதற்கு முன், இவன் எழுந்து போன் செய்து விடுகிறான்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...