பிரவினிடம் உன் ராசி என்னவென்று கேட்டால், கொஞ்சமும் தயக்கமில்லாமல் "எங்கப்பாவிடம் திட்டும் வாங்கும் ராசி" என்று சொல்லுவான். நல்லதோ கெட்டதோ எதோ ஒரு விஷயத்திற்காக அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அவன் வழக்கம். காலையோ மாலையோ அவனை திட்டிக் கொண்டே இருப்பது அவன் அப்பாவின் வழக்கம்.
சிறு வயதில் இருந்தே அப்பாவுக்கு பயந்த பிள்ளையாகவே வளர்ந்தான் பிரவின். அப்பா திட்டும் போது, அவன் அழுததோ எதிர்த்து பேசியதோ இல்லை. ஆனாலும் அவனுடைய அம்மாவைத் திட்டினால் மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.. அப்பாவை எதிர்த்து பேச வேண்டும் போலிருக்கும். ஆனால் அப்பாவின் மீது கொண்ட பயத்தின் காரணத்தினால் அழுதுக் கொண்டே தூங்கிவிடுவான். இந்த விசயத்தில் அவன் அம்மாவிற்கே ஒரு வருத்தம் உண்டு. அவர் அப்படி திட்டும் போது, வீட்டிற்கு பெரிய மகன் நீ தான். நீயே கேட்கவில்லையென்றால் வேறு யார் கேட்பார்கள் என்று அவன் மீது வருத்தப்பட்டுக் கொள்வாள். பிரவினுக்கும் திருப்பி கேட்க வேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும் ஆனால் அப்பாவின் மீதான பயம், அந்த எண்ணத்தை முழுதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்... இப்படியே தான் அவனுடைய பள்ளி, கல்லூரி காலங்கள் கடந்தன.
வேலைக்காக வீட்டை விட்டு வந்தான் பிரவின். தினமும் அம்மாவிடம் அவன் பேசிவிடுவான். அவனிடம் அப்பா பேசிவிடுவார். போனில் அவ்வப்போது அப்பா திட்டியதாக அம்மா சொன்னால் பிரவினுக்கு கோபம் தலைக்கேறும். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அம்மாவை எதற்காகவும் திட்ட வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டுக் கொள்வான். அவரும் சரி என்பது போல் தலையாட்டி விடுவார்.
ஆனால் அவரால் திட்டாமல் இருக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயம், முன் கோபத்தினால்தான் அவர் அப்படி திட்டுகிறார் மற்றபடி அவருக்கு தன் மீதும், அம்மா மீதும் அதிக பாசம் என்பதை வேலைக்காக வீட்டை விட்டு வந்திருக்கும் இந்த இடைவெளியில் அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
அன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அம்மாவைத் திட்டி இருக்கிறார். அவன் அம்மா, அதை அழுதுக் கொண்டே பிரவினிடம் போனில் சொல்லிவிட்டார். பிரவின் உடனே அப்பாவிற்கு போன் செய்துவிட்டான். அதில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து சண்டை பெரிதாகிவிட்டது. கடைசியில் அவன் அப்பா, "வேண்டுமென்றால் உன் அம்மாவை உன்னுடனே கூட்டிக் கொண்டு போய்விடு" என்று சொல்லி போனை அணைத்துவிட்டார்.
பிரவினுக்கு "திக்"கென்று ஆகிவிட்டது. அப்பாச் சொன்ன அந்த வார்த்தையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவன் அம்மா உடனே தன்னை வந்து கூட்டிச் செல்லும்படி போன் செய்தார். பிரவின் சிறிது நேரம் இருவருடனும் பேசாமல் போன் செய்யாமல் இருந்தான்.
பிறகு முதலில் அம்மாவிற்கு போன் செய்தான். அப்பா எப்பொழுதுமே இப்படித்தானே அம்மா..! அவர் கோபத்தில் பேசுவதற்கெல்லாம் வருத்தமும் படாதே, பெரிதாகவும் எடுத்து கொள்ளாதே..! என்று சமதானப்படுத்தினான். அடுத்து அப்பாவிடம் பேசி அவரையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான்...
அடுத்து முறை போன் செய்யும் போது, என்னம்மா, என்கூட சென்னைக்கே வந்து விடுகிறாயா என்று விளையாட்டாக கேட்டான் பிரவின். உடனே அவன் அம்மா, நான் வந்துவிட்டால் உன் அப்பா சாப்பாட்டுக்கு என்னடா செய்வார். அவர் அப்படித் தான் எப்பொழுதும் திட்டிக் கொண்டு இருப்பார். அதற்காக உன்னுடன் வந்து இருந்து விட முடியுமா.? நான் எங்கேயும் வரமாட்டேன் என்றாள்.. அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இணைப்பில் அவன் அப்பா வந்தார். அம்மாவிடம் போன் வைக்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் பேசினான்..
நான் போனப் பின்பு உன் அம்மாவை யார் பார்த்து கொள்வார் எப்படி பார்த்து கொள்வார் என்று அடிக்கடி கவலைப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் நேற்றுடன் அந்த கவலை தீர்ந்துவிட்டது.. நீ என்னைப் பற்றி யோசிக்கவே யோசிக்காதே... உனக்கு உன் அம்மாதான் முக்கியம். உன் அம்மாவிற்கே எப்பொழுதும் ஆதரவாகப் பேசு... என்று கலங்கிய குரலில் சொல்லி போனை வைத்துவிட்டார்..
அப்பா திட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்று அவனுக்கு புரியவில்லை. அதேப் போல் இப்பொழுது அழ வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்றும் பிரவினுக்கு தெரியவில்லை...
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment