டெல்லியில் ஜோதி சிங் (நிர்பயா) புனேயில் ரசிலா கேரளத்தில் லட்சுமி சென்னையில் ஸ்வாதி சேலத்தில் வினுப்ரியா அரியலூரில் நந்தினி இந்தப் பெண்களின் பின்புலங்கள் வெவ்வேறானாலும் இவர்கள் மாண்டதற்கு முதன்மை காரணம் "சாதி, மதம், மொழி, மாநிலம்" என எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு பார்த்தால், "இவர்கள் பெண்ணாகப் பிறந்தது" மட்டும் தான் எஞ்சி நிற்கிறது. பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக இந்த உயிர்களோடு வெளியே தெரியாத இன்னும் பல உயிர்கள் தினம்தினம் பறிபோகிக் கொண்டிருக்கின்றன. தனி மனித ஒழுக்கம், அறம், நன்னெறி மற்றும் சுயக் கட்டுப்பாடு போன்ற வாழ்வியல் கூறுகள் மனித சமூகத்திற்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை அந்நியமாக்கிவிட்டு ஒழுக்கமின்மை, வன்மம், சுயநலம் ஆகியவற்றை நோக்கி வேகமாக படையெடுத்துக் கொண்டிருக்கிறது. நியாயம் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தீமைச் செய்பவர்கள் செய்துக் கொண்டே இருக்கிறார்கள் உடலுக்கு பின்னாலுள்ள ஒரு பெண்ணின் உணர்வுகளும், அவளது உயிரோடு சேர்த்து கருவறுக்கப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆண்களாகிய நாம...