எங்கு எவர் செவிகளிலும் கேட்பொறியொன்று கூடுதல் உடல் உறுப்பாகியிருக்கிறது. இன்று விரல்நுனியில் எந்த பாடலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கேட்கலாம்.
ஆனால் சொந்த ஊரில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் போது பேருந்தில் இசைக்கும் இளையராஜாவின் பாடலில் ஆசைகள் கஷ்டங்கள் உறவுகள் நினைவுகள் ஏக்கங்கள் நெஞ்சை சற்றுக் கூடுதலாக அலைக்கழிக்கும். டீக்கடையில் ஓடும் தேவா பாடல்கள் வழக்கத்தை விட அதிகமானத் துள்ளலை உண்டாக்கும். ஊடல் பொழுதுகளில் யுவனின் இசை ஆறுதலை வஞ்சமில்லாமல் அளிக்கும். கூடல் காலங்களில் ரஹ்மானின் ராகம் காதலை கொஞ்சம் உயர்த்தி பிடிக்கும்.கேட்கும் இடத்தை பொறுத்து இசையின் சுவையும் மாறுபடும்.
எதிர்பாராத பொழுது தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ வெகுநாட்களுக்கு பிறகு கேட்கும் நமக்கு பிடித்த பாடல் பால்ய கால பரவசங்களை கண்முன் கொண்டு வந்து மயிர்க் கூச்செரிய செய்யும். இதயமும் கொஞ்சம் இடைவெளி விட்டு துடிக்கும். அந்த இடைவெளியை கீதங்கள் நிறைக்கும். மாய நினைவுகள் மனதை மயக்கும்.
"ஒலியும் ஒளியும்" "கோடை பண்பலை" யென்று பாடல்களுக்காக காத்திருந்த காலம் இப்பொழுதில்லை. பிறந்ததில் இருந்து பிடித்த அனைத்து பாடல்களையும், வெளிவந்த பாடல்கள்களையும், வெளிவராத படங்களின் பாடல்களையும் தனது நிரந்தர நினைவு கல்லறையில் புதைத்து வைத்திருக்கிறது கைப்பேசி.ஆசைக்கு ஆயிரம் பாடல்களை கைப்பேசியில் பதிவு செய்து வைத்தாலும் கேட்ட அந்த ஐந்து பாடல்களையே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது.
புதிய பாடல்கள் வெளியான அடுத்த சில மணித்துளிகளில் கணினிகளிலும் பேசிகளிலும் பதிவேறி விடுகின்றன. பேஸ்புக் காலத்தில் புது பாடல்கள் மிக விரைவில் பழைய பாடல்களாகி விடுகின்றன. போன வெள்ளிக் கிழமை வெளியான பாடல் இந்த வாரம் மிகப் பழமையானதாகத் தோன்றுகிறது.
எப்பொழுதும் கைக்குள்ளையே அடைந்து இருப்பதனாலோ என்னவோ மிகப் பிடித்த பாடலாக இருந்தாலும் சில நாட்களிலேயே அதற்குண்டான ரசனையை இழந்து விடுகிறது.
இசையென்னும் போதை காலம் கடந்து காலம் இழந்து நிகழ்ந்ததை இலகுவாக்கி நினைவுகளை கண்ணீராக்கி பயணிக்க வைக்கும் வல்லமையுடையது. அதனால் கண்ணீரை பனித்துளியாகவும் மாற்ற இயலும் பன்னீர்த்துளியாகவும் மாற்ற இயலும்.
ஆனால் இன்று வெறும் காலத்தை கடத்த மட்டும் வெறுமனே பெரும்பாலானோரின் செவிப்பாறைகளுக்குள் செலுத்தப்பட்டு கொண்டிருக்கப்படுகிறது.

கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment