பெரும்பாலான டீக்கடை, பெட்டி கடை, மளிகைக் கடை மற்றும் சாலையோர உணவகங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அரசு பேருந்திலேயே நேற்று ஒரு நடத்துனர் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கிறார். ஏனென்று கேட்டால், "நாங்கள் திரும்பிக் கொடுத்தால் பயணிகள் யாரும் வாங்குவதில்லை அதனால் நாங்களும் யாரிடமும் இப்போது வாங்குவதில்லை " என்கிறார்.
பத்து ரூபாய் நாணயங்கள் மீதான தேவையில்லாத அச்சம் பொது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது அல்லது செல்லாது என்று அறிவிக்கப்டும் என்ற வதந்தி பொது மக்களிடையே காணப்படுகிறது.
பத்து ரூபாய் நாணயங்கள் கணிசமான அளவில் புழக்கத்தில் இருக்கும் நிலையில், பொது மக்களிடையே காணப்படும் இதுப்போன்ற அச்சத்தினால் ஒருபுறம் சில்லரைத் தட்டுப்படும் மறுபுறம் சில்லரைத் தேக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கார்த்திக் பிரகாசம்...

ஆக பொது மக்களிடையே காணப்படும் பத்து ரூபாய் நாணயங்கள் மீதான அச்சத்தைப் போக்கவும், வதந்தி பரவுவதைத் தடுக்கவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தக்க நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment