ஊருக்குள் அயராது உழைத்து நேர்மையுடனும் பாச நேசத்துடனும்
வாழ்ந்தாலும், ஊருக்கு வெளியில் நம்மை கீழ்ச்சாதி பயனென்று தனியாகத் தானே உட்கார வைக்கின்றான். இந்த(து) மாதத்தில் கீழ்ச்சாதியில் பிறந்ததால் தானே எல்லோர் கண்ணிலும் இழிவாகவும் தரக்குறைவாகவும் தெரிகிறோம். இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்த சாதியின் பேரால் தரக்குறைவாக நடத்தப்படும் கொடுமைகளில் இருந்து விடுதலை கிடைக்குமே என்று மதம் மாறிய ஒரு ஊரின் கதை தான் "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்".
மதம் மாறிய பிறகு சாதி பிரச்சனை கண்மறைவாகி வேறொரு பிரச்சனை முளைக்கிறது. முழுமனதாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு முப்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த ஊர் மக்கள் தொடர்ந்து மாறிய மதமான இஸ்லாமிலும் பரம்பரை இஸ்லாமியர்களால் ஒதுக்கப்படுகிறார்கள். அதுவும் கீழ்ச்சாதியில் இருந்து மாதம் மாறியவன் என்று தெரிந்தால் இன்னும் இழிவான பார்வை தெளிக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் பிறந்த பெண்களை யாரும் பெண் கேட்டு வருவதில்லை.
அவ்வாறு நாற்பது வயதாகியும் யாரும் மணம் முடிக்க வராத நிலையில் இனிமேலும் பெற்றோர்க்கு பாரமாக இருக்க வேண்டாமென தன் வாழ்வையே முடித்துக் கொள்ளும் கருப்பாயியாக பிறந்து நூர்ஜஹானாக வாழ்ந்து மறைந்த ஒரு பெண்ணின் மரணக் கடிதத்திலிருந்து விரிகிறது நாவல்.
சமீபத்தில் படித்த நாவல்களிலேயே மனதளவில் மிகுந்த தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்திய நாவல். மனிதனை மனிதனாக பார்க்காமல் அவனுடைய சாதியை அடையாளமாகப் பார்க்க விரும்பும் கொடூர சமூகத்தின் மீதான கடுமையான சாடல், அன்வர் பாலசிங்கம் எழுதிய இந்த "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்".
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment