தாங்கள் நாற்பத்தைந்து ஐம்பது வயதில் சாதித்ததை பிள்ளைகள் இருபத்தைந்து வயதில் சாதிக்க வேண்டுமென பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கைக் கடலில் மூச்சுத் திணற திணற அழுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் சொத்து, பதவி, பட்டம், புகழ் ஆகியவற்றுடன் சேர்த்து அவர்களுடைய வியாதிகளையும் சேர்த்து சம்பாதித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏனோ கவனிக்க மறந்து விடுகின்றனர் அல்லது அதைப் பற்றி சிந்திக்காமலேயே விட்டு விடுகின்றனர்.
தங்களுடைய கனவுகளுக்கும் பொறுப்புகளுக்கும் மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை எந்தப் பக்கமும் கரைச் சேர்வதென்று திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
தங்களுடைய கனவுகளுக்கும் பொறுப்புகளுக்கும் மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை எந்தப் பக்கமும் கரைச் சேர்வதென்று திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
பெற்றோர்களின் அழுத்தத்தினால் அவசர அவசரமாக வளர்ந்து, அவசர அவசரமாக வாழ்ந்து, ஓர் தலைமுறை இருந்த இடம் தெரியாமல் அவசர அவசரமாக இறந்துக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment