"மகர்" இனத்தவரின் மதமாற்றத்திற்காக டாக்டர்.அம்பேத்கர் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உரைகள் என்றால் வெறுமனே அல்ல. மத மாற்றத்தினால் ஏற்படப் போகும் சாதக பாதகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் கூடிய தெளிவான பேச்சுகள்.
ஏன் இந்து மாதத்தில் இருந்து வெளியேற வேண்டும் வேண்டும்.? இந்து மாதத்தில் மட்டும் தான் சாதிய பாகுபாடு உண்டா மற்ற மாதங்களில் இல்லையா.? மத மாற்றத்தினால் நம் அரசியல் உரிமைகள் பறிப்போகுமா.? மதமாற்றத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் எந்த மதத்திற்கு மாற வேண்டும்.? ஏன் புத்த மதம்.? புத்த மதத்தின் கோட்பாடுகள் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது.? என அனைத்து விதமான கேள்விகளையும் கேட்டு அதற்கான பதில்களையும் பாமரனுக்கும் புரியும் விதத்தில் கொடுத்துள்ளார்.
"கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" மற்றும் "நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்" என இரண்டு புத்தங்கங்களையும் தற்செயலாக அடுத்தடுத்து படிக்கும் சூழல் அமைந்துவிட்டது.
இரண்டிலுமே "மையக் கரு" ஒன்று தான்.இரண்டு புத்தககங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்து மாதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை கொடுமையும் அதனால் மதம் மாறும் மக்களும் தான் களம்.
"நான் இந்துவாகச் சாகமாட்டேன்" என்ற புத்தகத்தில் அம்பேத்கர் மதமாற்றத்திற்கான அவசியத்தை மக்களிடையே எடுத்துச் சொல்கிறார். தீண்டாமைக் கொடுமையினால் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியப் பின் அம்மக்கள் அனுபவிக்கும் வேறுவிதான பிரச்னைகளை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்".
சகமனிதனை மனிதனாகப் பார்க்காமல் சாதியும் சாதியக் கொடுமைகளும் ஒருவனை எவ்வளவு இழிவுபடுத்தியிருக்கின்றன/இழிவுபடுத்துகின்றன என்பதை கண்முன்னே கொண்டுவருகின்றன இந்த இரு புத்தகங்களும்.
நகரமயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்று வேகமாக மக்கள் ஆதலாகிக் கொண்டிருந்தாலும் "சாதிமயமாதல்" இன்றளவும் நம்மை விட்டு அகலவில்லை. சாதி பாகுபாடு நிலவும்வரை சமூகத்தில் சமத்துவத்தை நிலை நிறுத்துவது கடினம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment