கண்ணிலும்
கனவிலும்
கன்னியை
கண்ணாளனும்
காதலிக்கும்
காட்சிப்பிழைகள்
இதயத்திற்கும்
பாதத்திற்கும்
இடைவெளி இம்மியளவுமின்றி
இருத்து போகுதே
கொலுசின் கொஞ்சல்களும்
வளவியின் சிணுங்கல்களும்
செவியை சென்றடைவதற்குள்
காற்றினில் சிறைப்படுதே
சுற்றும் பூமியும்
சிறிதுநேரம் நின்று
கண்சிமிட்டி செல்லுதே
மொட்டுகள் உடையாமல்
பூக்கள் கொஞ்சம் பூக்குதே
முகில் கூட்டமொன்று
முந்தானை தேவதையை
முத்துக்களில் நனைக்குதே
கனவிலும்
கன்னியை
கண்ணாளனும்
காதலிக்கும்
காட்சிப்பிழைகள்
காட்சிப்பிழைகளில்
பேதை நெஞ்சு
போதைக் கண்டு
பேயாட்டம் கொண்டு
தரையின் முதுகை
எட்டி மிதிக்காமல்
தொட்டு வருடுதே
பேதை நெஞ்சு
போதைக் கண்டு
பேயாட்டம் கொண்டு
தரையின் முதுகை
எட்டி மிதிக்காமல்
தொட்டு வருடுதே
இதயத்திற்கும்
பாதத்திற்கும்
இடைவெளி இம்மியளவுமின்றி
இருத்து போகுதே
கொலுசின் கொஞ்சல்களும்
வளவியின் சிணுங்கல்களும்
செவியை சென்றடைவதற்குள்
காற்றினில் சிறைப்படுதே
சுற்றும் பூமியும்
சிறிதுநேரம் நின்று
கண்சிமிட்டி செல்லுதே
மொட்டுகள் உடையாமல்
பூக்கள் கொஞ்சம் பூக்குதே
முகில் கூட்டமொன்று
முந்தானை தேவதையை
முத்துக்களில் நனைக்குதே
மழையை மனதுக்குள்
பத்திரப்படுத்த நினைக்குதே
ஹார்மோன்களின் தாக்கம்
அந்நிய செலவாணியை விட
அதீத ஆதிக்கம் செலுத்துதே
விண்மீன்களை
வீட்டிற்கு அழைத்து
விருந்தொன்று வைக்கத்
தோன்றுதே
இவையெல்லாம்
பிழையாகவே இருக்கட்டுமே
அதில் பிழையேதும்
இருப்பதாகத் தோன்றவில்லை
கண்ணாளன் வருவான்
கண்ஜாடை கனிவான்
காதலைத் தருவான்
கார்த்திக் பிரகாசம்...
பத்திரப்படுத்த நினைக்குதே
ஹார்மோன்களின் தாக்கம்
அந்நிய செலவாணியை விட
அதீத ஆதிக்கம் செலுத்துதே
விண்மீன்களை
வீட்டிற்கு அழைத்து
விருந்தொன்று வைக்கத்
தோன்றுதே
இவையெல்லாம்
பிழையாகவே இருக்கட்டுமே
அதில் பிழையேதும்
இருப்பதாகத் தோன்றவில்லை
கண்ணாளன் வருவான்
கண்ஜாடை கனிவான்
காதலைத் தருவான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment