எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்ராவாகிறார் சசிகலா...!!!
நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு கட்சியின் தலைவனை/தலைவியை முன்னிறுத்தி தான் குறிப்பிட்ட வேட்பாளர்களை தங்களின் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். வேட்பாளரின் தகுதிகளையோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொறுத்தோ அல்ல. ஆக ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சித் தலைமையை முன்னிறுத்திதான் தங்கள் வெற்றிகளைப் பதிவு செய்கின்றனர்.
அதன்படி இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா என்ற ஒற்றை பிம்பத்தினால் ஜெயித்தவர்கள். ஜெயலலிதா மறைந்த போதே இவர்கள் பெற்ற வெற்றியும் மறைந்துவிட்டது. எவரது முகத்தைக் காட்டி இவர்கள் பதவிக்கு வந்தார்களோ அவரே இன்றில்லை எனும் போது இவர்கள் பெற்ற வெற்றி எப்படிச் செல்லுபடியாகும்.
இதில் இவர்களெல்லாம் ஒன்றிணைந்து எந்தவித அரசியல் முன்னனுபவமும் இல்லாத, இதுவரையில் எந்தவித அரசியல் பின்புல பதவிகளிலும் இருந்திடாத ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் தங்கள் தலைவியே இருமுறை முதல்வர் பதவியில் அமர வைத்த ஒருவரை கீழிறக்கிவிட்டு.
எதிர்க்க வேண்டியவர்கள் வலுவாக நிலையில் இருந்தும் எதுவும் பேச மறுக்கின்றனர்.
ஒரு நாட்டின் முதல்வர் என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து தங்களின் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
கார்த்திக் பிரகாசம்...
எப்படி யோசித்து பார்த்தாலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Comments
Post a Comment