Skip to main content
சாப்பாட்டு மற்றும் டீக்கடை வாசல்களின் வெளியே கையேந்தி நிற்பவர்களை பார்த்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. சிலர் உண்மையாகவே பிள்ளைகளால் கைவிடப்பட்டோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட கடின சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு கையேந்தி நிற்பவர்கள் பெரும்பாலும் அதையே வாடிக்கையாகச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை தினமும் அந்த இடத்தில் பார்க்க முடிகிறது. ஒருவர் பணமோ அல்லது சாப்பிட ஏதாவது வழங்கினாலும் அவர்கள் அத்தோடு விடுவதில்லை. அடுத்து வேறொருவரிடம் போய் நிற்கிறார்கள். கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முற்படும் போதோ இவர்கள் கையை ஏந்துகிறார்கள்.

இது சமூகத்தின் மீதான ஒருவித உளவியல் தாக்குதலாகத் தோன்றுகிறது. ஒருவனின் மனிதநேயத்தை ஈவு இரக்கத்தை ஒரு கும்பல் நேரடியாக தங்களின் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இயலாமையை போர்வையாக போர்த்திக் கொண்டு அலையும் இதுபோன்ற ஒருசில கும்பல்களால் உண்மையில் கஷ்டப்படுபவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் எங்கோ யாரோ ஒருவரால் நிமிடத்திற்கு நிமிடம் நிராகரிக்கப்படுகிறார்கள்.

கையேந்தும் மனிதர்களே இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும். அதிலும் மற்றவர்களின் இரக்கக் குணத்தை தங்களின் இச்சைக்காக இசைந்துக் கொடுக்க கையேந்துபவர்கள் இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...