விரைவு ரயிலில் சென்றால் விரைவாக வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடலாமென்று தங்கள் உயிரை பணயம் வைத்து தொங்கி கொண்டு செல்பவர்களின் கவனத்திற்கு..
ரயில்வே நிர்வாகமும் ஒரு பெட்டியில் பயணிக்க வேண்டிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். தானியங்கி கதவுகளை அனைத்து வகையான ரயில்களிலும் செயல்படுத்த வேண்டும்.
அப்பொழுது தான், இது போன்ற விரைவாக வீட்டிற்கு செல்ல முனைபவர்கள் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பமாலே முடியக்கூடிய அவலக் கதைகளை சமூகப் பயண பக்கங்களில் இருந்து அகற்ற முடியும்..
கார்த்திக் பிரகாசம்...
பரங்கி மலையில் மூன்று உயிர்கள் பரிதாபமாக நேற்று பலியாகி உள்ளன.
அதிக கூட்டத்தினால் தொங்கி கொண்டு பயணம் செய்தவர்களில் ஒருவரின் பயணப்பை எதிரே வந்த மின் கம்பத்தில் மாட்டிக் கொள்ள கண் இமைக்கும் நேரத்தில் ஏழு பேர் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்துவிட்டனர். நான்கு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண் அயரும் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம். கூட்ட நெரிசலில் நெருக்கியடித்து படிக்கட்டின் விளிம்பில் நின்று பயணம் மேற்கொள்ள முனையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் வீட்டில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோரைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை பற்றியும் சிந்திக்கவும்.
கண் அயரும் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம். கூட்ட நெரிசலில் நெருக்கியடித்து படிக்கட்டின் விளிம்பில் நின்று பயணம் மேற்கொள்ள முனையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் வீட்டில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோரைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை பற்றியும் சிந்திக்கவும்.
ரயில்வே நிர்வாகமும் ஒரு பெட்டியில் பயணிக்க வேண்டிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். தானியங்கி கதவுகளை அனைத்து வகையான ரயில்களிலும் செயல்படுத்த வேண்டும்.
அப்பொழுது தான், இது போன்ற விரைவாக வீட்டிற்கு செல்ல முனைபவர்கள் வீட்டிற்கு ஒருபோதும் திரும்பமாலே முடியக்கூடிய அவலக் கதைகளை சமூகப் பயண பக்கங்களில் இருந்து அகற்ற முடியும்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment