"இந்த மாசம் இருவதாம் தேதிக்குள்ள புள்ளைக்கு ஆர்டர் வருதான்னு பாப்பேன் இல்லன்னாலும் வேல வேணாம்னு எழுதிக் குடுத்துருவேன்.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கண்டவன் கிட்டலாம் ஏச்சு பேச்சு வாங்கிட்டு இந்த வேலையச் செய்யறது..." கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட எரிச்சலில் பேருந்தின் பிரேக்கை மிதித்தபடியே சலித்துக் கொண்டான் கோவிந்தன். எந்த வேலைல இருக்கறவன்தான் அவனுக்கு மேல இருக்கவன்கிட்ட திட்டு வாங்காம இருக்கான். "தோ...! சட்டையை பேண்ட்க்குள்ள விட்டுட்டு, அடிக்கிற வெயிலுக்கு ஷூக்குள்ள கால சொருகிகிட்டு, ஏதோ இங்கிலீஷு எழுத்து போட்ட ஐடி போட்டுக்கிட்டு உனக்கு சைடுல ஒரு தம்பி உக்காந்துருக்கானே அவனா இருக்கட்டும், இல்ல இதா தலைக்கு உருமா கட்டிக்கிட்டு கையில மம்பட்டியோட உக்காந்துருக்கானே இவனா இருக்கட்டும்" யார்தான் அடுத்தவன் வாயில விழாம வேல செய்றான். இல்ல செஞ்சிடத்தான் முடியும். சொல்லு பாப்போம்.. டிக்கெட் கிழித்துக் கொண்டே பேருந்தின் பின்னிருந்து குரல் கொடுத்தான் ராஜன். அது எவ்வளவோ பரவாயில்லையே. ஒரு ரூம்குள்ள முடிஞ்சுரும். நாலு பேத்துக்குள்ள இருக்கும் ஆனா தலையெழு...