சிந்தனைகள் சிதைக்கப்பட்டு
கவிதைகள் கொல்லப்பட்டு
எழுத்துகள் தொலைவாக்கப்பட்டு
ஓவியங்கள் நசுக்கப்பட்டு
இலக்கியங்கள் மறைக்கப்பட்டு
மற்றதெல்லாம் மறுக்கப்பட்டு
பணம் ஈட்டுவதற்காக
படிப்பறிவு மட்டுமே புகுத்தப்பட்டு
படிப்பறிவு மட்டுமே திணிக்கப்பட்டு
படிப்பறிவு மட்டுமே சாத்தியப்பட்டு
நானொரு பட்டதாரியானேன்
யாருக்காக வேலைச் செய்கிறேன்
எதற்காக வேலைச் செய்கிறேன்
ஏன் வேலைச் செய்கிறேன்
என்றெல்லாம் யோசித்து
அலட்டிக் கொள்ளாமல்
நானும் மற்றுமொரு
நவநாகரீக கொத்தடிமையானேன்...!
கார்த்திக் பிரகாசம்...
கவிதைகள் கொல்லப்பட்டு
எழுத்துகள் தொலைவாக்கப்பட்டு
ஓவியங்கள் நசுக்கப்பட்டு
இலக்கியங்கள் மறைக்கப்பட்டு
மற்றதெல்லாம் மறுக்கப்பட்டு
பணம் ஈட்டுவதற்காக
படிப்பறிவு மட்டுமே புகுத்தப்பட்டு
படிப்பறிவு மட்டுமே திணிக்கப்பட்டு
படிப்பறிவு மட்டுமே சாத்தியப்பட்டு
நானொரு பட்டதாரியானேன்
யாருக்காக வேலைச் செய்கிறேன்
எதற்காக வேலைச் செய்கிறேன்
ஏன் வேலைச் செய்கிறேன்
என்றெல்லாம் யோசித்து
அலட்டிக் கொள்ளாமல்
நானும் மற்றுமொரு
நவநாகரீக கொத்தடிமையானேன்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment