Skip to main content

நன்றிச் சொல்ல வேண்டி

வட சென்னையைச் சேர்ந்த சிறுவர்களின் கல்விக்காகவும், கல்விச் சார்ந்த பிற தேவைகளுக்காகவும் நெருக்கமான நண்பர்களிடம் உதவிக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். ஒருவர் கூட மறுப்புச் சொல்லவில்லை. மறுகேள்விக் கேட்காமல் தங்களால் இயன்றதை உடனே அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு நன்றிகள் கோடி. மேலும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்.

சேரிவாழ் பிள்ளைகளின் கல்விக்காகவும், அவர்களை சமூகத்தில் நல்வழிப்படுத்தவும் அம்பேத்கர் மன்றங்களின் உதவியுடன் "திரு. பாஸ்கர்" அவர்களின் மேற்பார்வையில் வட சென்னையைச் சுற்றி பதினைந்து முதல் இருபது இடங்களில் சிறுவர்/சிறுமியர்களுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் வருடாவருடம் கோடைக் கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இந்தாண்டு பங்குபெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்குவதற்காவும், அவர்களுக்கு தன்னார்வமாக வகுப்பெடுத்த மாணவ ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காகவும் நண்பர்களிடம் நிதியுதவி வேண்டியிருந்தேன்.

நண்பர்களின் மூலம் மொத்தம் "பதினாறாயிரம் ரூபாய்" ( ரூ. 16,000) இரண்டு நாட்களில் வசூலிக்கப்பட்டது.

மாணவ ஆசிரியர்களின் சமூக எண்ணங்களைத் தூண்டும் விதமாகவும், அவர்களுக்கு மனிதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவ்விழிப்புணர்வின் மூலம் சமூகம் பற்றிய புரிதலை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதற்காக "அம்பேத்கர், பெரியார்" ஆகியோரின் கருத்துகளும் அவர்களின் சமூக நீதிச் சொல்லும் புத்தங்கங்களும், "கம்யூனிச கோட்பாடுகள்" குறித்த புத்தங்கங்களும் மற்றும் இன்னும் பிற புத்தங்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. போக மீதம் பன்னிரெண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் (ரூ. 12,500) ரொக்கம் பிள்ளைகளின் பரிசுகளுக்காக வழங்கப்பட்டது.

பரிசளிக்கப்பட்ட புத்தங்களின் பட்டியல் 1. சாதியை அழித்தொழிக்கும் வழி (அம்பேத்கர்) 2. பெண் ஏன் அடிமையானாள்.? (பெரியார்) 3. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஏங்கெல்ஸ்) 4.அரசியல் பழகு (சமஸ்) 5. துரோகச் சுவடுகள் (வெ. இறையன்பு) 6. பெரியார் ஒளிமுத்துக்கள் 7. காமராஜர் ஒரு சரித்திரம் (முருக தனுஷ்கோடி) 8. துணிந்தவனுக்கே வெற்றி (ஜான் கேன்பீல்ட்) 9. +2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் (கே.சத்தியநாராயணன்) 10. எமோஷனல் இன்டெலிஜென்ஸ் (சோம.வள்ளியப்பன்) 11. உலகை மாற்றிய புரட்சியாளர்கள் (மருதன்) 12.தாய் (மாக்ஸிம் கார்க்கி) 13. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்.? (ம. வெங்கடேசன்) 14. நான் மலாலா (மலாலா யூசுப்ஸை) 15. பெரியார் வாழ்க்கை வரலாறு (சாமி.சிதம்பரனார்) 16. அம்பேத்கர் (ஆர்.முத்துக்குமார்) 17. பெரியார் (ஆர்.முத்துக்குமார்) 18. அம்பேத்கர் வாழ்வும் பணியும் (என்.ராமகிருஷ்ணன்) 19. என் தந்தை பாலைய்யா (ஒய்.பி. சத்யநாராயணா) 20. லஜ்ஜா அவமானம் (தஸ்லீமா நஸிரீன்)

நிதியுதவி அளித்து உதவிய நண்பர்களின் பட்டியல் (பணம் கிடைத்திட்ட கால வரிசைப்படி) 1. கீர்த்தி 2. ராஜ பாண்டி 3. மணிகண்டன் 4.ராஜ் 5.வைஷ்ணவி 6.ஜெப் 7.திவ்யா 8.வெங்கடேஷ் குமார் 9.அருள்மணி 10.ரமேஷ் 11.ஜாகிர் 12.பாக்கியா 13.சிவதாஸ் 14.ஐஸ்வர்யா 15.கார்த்திக் 16.சரவணன் 17.பூபதி 18.சக்ரவர்த்தி 19.ப்ரீத்தி 20.சுஜாநந்த் 21.ஷெரிப் 22.ஆதிரா 23.ஜெகதீஸ் 24.பவ்யா

நண்பர்களின் உதவியையும், ஆதரவையும் தொடர்ந்து எதிர்நோக்குகிறேன்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...