காலையில் தான்
திருமணம் முடிந்தது..!
அன்றைய இரவுக்கு
வெண்ணிற சீலையை
உடுத்தச் சொன்னார்கள்
அவளுக்கொன்றும் விளங்கவில்லை
ஆனாலும் உடுத்திக் கொண்டாள்
நகைக் கடை பொம்மைப் போல்
நன்கு அலங்கரிக்கப்பட்டாள்
பால் பழங்களுடன்
அலங்கரிக்கப்பட்ட
முதலிரவு அறைக்கு அனுப்பப்பட்டாள்
அவ்வலங்காரம் அவளை
வெகுவாகக் கவரவில்லை
அருகில் வந்து அவன் தொட்டான்
நாள் முழுவதுமிருந்த சடங்குகளால்
களைப்புற்றிருந்தாலும்
அவனுக்காக அனுசரித்துப் போனாள்
களைப்பில் உறங்கியதே அறியாத
அதிர்ச்சியால் காலையில் கண் விழித்தாள்
கை கால்கள் அசைய மறுக்கும் அசதி
அசதியைத் துரத்த முதலில் குளித்து முடித்தாள்
செயினைக் குளியலறையிலேயே
மறந்துவிட்டதால் எடுக்கச் சென்றாள்
அங்கு அவளின் மாமியாரும் நாத்தனாரும்
அவள் உடுத்தியிருந்த வெண்ணிற சீலையில்
எங்கேனும் இரத்தக் கறை
படிந்திருக்கிறாதாதென்று
சோதித்து பார்த்துக் கொண்டிருந்தனர்...!
கார்த்திக் பிரகாசம்...
திருமணம் முடிந்தது..!
அன்றைய இரவுக்கு
வெண்ணிற சீலையை
உடுத்தச் சொன்னார்கள்
அவளுக்கொன்றும் விளங்கவில்லை
ஆனாலும் உடுத்திக் கொண்டாள்
நகைக் கடை பொம்மைப் போல்
நன்கு அலங்கரிக்கப்பட்டாள்
பால் பழங்களுடன்
அலங்கரிக்கப்பட்ட
முதலிரவு அறைக்கு அனுப்பப்பட்டாள்
அவ்வலங்காரம் அவளை
வெகுவாகக் கவரவில்லை
அருகில் வந்து அவன் தொட்டான்
நாள் முழுவதுமிருந்த சடங்குகளால்
களைப்புற்றிருந்தாலும்
அவனுக்காக அனுசரித்துப் போனாள்
களைப்பில் உறங்கியதே அறியாத
அதிர்ச்சியால் காலையில் கண் விழித்தாள்
கை கால்கள் அசைய மறுக்கும் அசதி
அசதியைத் துரத்த முதலில் குளித்து முடித்தாள்
செயினைக் குளியலறையிலேயே
மறந்துவிட்டதால் எடுக்கச் சென்றாள்
அங்கு அவளின் மாமியாரும் நாத்தனாரும்
அவள் உடுத்தியிருந்த வெண்ணிற சீலையில்
எங்கேனும் இரத்தக் கறை
படிந்திருக்கிறாதாதென்று
சோதித்து பார்த்துக் கொண்டிருந்தனர்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment