கத்தல் கூச்சல்களின்றி
மயான அமைதியில் மிதக்கின்றன
வீடுகள்
விதவையின் நெற்றியைப் போல்
வெறிச்சோடி கிடக்கின்றன
தெருக்கள்
வெறுமனே தரையில்
விழுந்து மடிகின்றது
வெயில்
தழுவிச் செல்ல தேகங்கள் இல்லாமல்
தேமேவென்று காணாமல் போகின்றது
காற்று
நாய் பூனைகளெல்லாம்
தன் எதிரிகள் தொலைந்த மகிழ்ச்சியில்
குத்தாட்டம் போடுகின்றன
நேற்றுவரை திட்டித் தீர்த்த பெற்றோர்கள் கூட
இன்று ஒரு கை உடைந்தது போல
தனிமையில் நேரத்தைத் தள்ளுகிறார்கள்
ஏனென்றால் அவர்கள்
பள்ளிக்குச் சென்றுவிட்டனர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
மயான அமைதியில் மிதக்கின்றன
வீடுகள்
விதவையின் நெற்றியைப் போல்
வெறிச்சோடி கிடக்கின்றன
தெருக்கள்
வெறுமனே தரையில்
விழுந்து மடிகின்றது
வெயில்
தழுவிச் செல்ல தேகங்கள் இல்லாமல்
தேமேவென்று காணாமல் போகின்றது
காற்று
நாய் பூனைகளெல்லாம்
தன் எதிரிகள் தொலைந்த மகிழ்ச்சியில்
குத்தாட்டம் போடுகின்றன
நேற்றுவரை திட்டித் தீர்த்த பெற்றோர்கள் கூட
இன்று ஒரு கை உடைந்தது போல
தனிமையில் நேரத்தைத் தள்ளுகிறார்கள்
ஏனென்றால் அவர்கள்
பள்ளிக்குச் சென்றுவிட்டனர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment