Skip to main content

அக்கரையில் ஓர் தேசம்

"இந்த மாசம் இருவதாம் தேதிக்குள்ள புள்ளைக்கு ஆர்டர் வருதான்னு பாப்பேன் இல்லன்னாலும் வேல வேணாம்னு எழுதிக் குடுத்துருவேன்.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கண்டவன் கிட்டலாம் ஏச்சு பேச்சு வாங்கிட்டு இந்த வேலையச் செய்யறது..." கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட எரிச்சலில் பேருந்தின் பிரேக்கை மிதித்தபடியே சலித்துக் கொண்டான் கோவிந்தன்.

எந்த வேலைல இருக்கறவன்தான் அவனுக்கு மேல இருக்கவன்கிட்ட திட்டு வாங்காம இருக்கான். "தோ...! சட்டையை பேண்ட்க்குள்ள விட்டுட்டு, அடிக்கிற வெயிலுக்கு ஷூக்குள்ள கால சொருகிகிட்டு, ஏதோ இங்கிலீஷு எழுத்து போட்ட ஐடி போட்டுக்கிட்டு உனக்கு சைடுல ஒரு தம்பி உக்காந்துருக்கானே அவனா இருக்கட்டும், இல்ல இதா தலைக்கு உருமா கட்டிக்கிட்டு கையில மம்பட்டியோட உக்காந்துருக்கானே இவனா இருக்கட்டும்" யார்தான் அடுத்தவன் வாயில விழாம வேல செய்றான். இல்ல செஞ்சிடத்தான் முடியும். சொல்லு பாப்போம்.. டிக்கெட் கிழித்துக் கொண்டே பேருந்தின் பின்னிருந்து குரல் கொடுத்தான் ராஜன்.

அது எவ்வளவோ பரவாயில்லையே. ஒரு ரூம்குள்ள முடிஞ்சுரும். நாலு பேத்துக்குள்ள இருக்கும் ஆனா தலையெழுத்து இங்க "ரோடுல போறது, திங்கறதுக்கு சோறு இல்லாதது, தலைக்கு எண்ணெ வைக்க வக்கில்லாததெல்லாம் திட்டுதே..!" வாய் மட்டும் பேசிக் கொண்டிருக்கப் பிரேக்கை மெல்ல விடுவித்து பேருந்தை நகர்த்தினான் கோவிந்தன்.

"அண்ணோவ். உன்னையாவது தெரிஞ்ச பாஷையிலே உன் மூஞ்சியே பாத்து ஒருத்தன் திட்டுறான். என்ன மாதிரி ஐடி கம்பெனிலே வேல செய்றவன்லாம் பாக்காத மூஞ்சிக்காரன்கிட்ட ஏதோ தஸ்சு புஸ்சுன்னு தெரியாத பாஷைல தெனமும் போன்ல திட்டு வாங்கிட்டு கெடக்கானுங்க" தன் பங்குக்கு ஆதங்கத்தைக் கொட்டினான் முத்து.

சீரான வேகத்தில் வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தான் கோவிந்தன். இருந்த பத்து பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு முத்துவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் ராஜன்.

ராஜன் முத்துவிடம் கேட்டான், "தம்பி. உன் கம்பெனில பி.இ மட்டும் தான் வேலைக்கு எடுப்பாங்களா இல்ல எல்லா டிகிரியும் எடுப்பாங்களா.?"

"பி.இ மட்டும் தாண்ணா எடுப்பாங்க" முத்து கூறினான்.

"என் பையன் டிகிரி முடிச்சுருக்கான் தம்பி. இப்போ கிண்டி எஸ்டேட்'ல ஒரு சின்ன கம்பெனில வேலச் செய்யுறான். இவன் பொறுப்பான பையன் தான். நேரத்துக்கு சரியா போயிடுவான். காலம் கடத்தாம கரெக்டா வேலையெல்லாம் முடிச்சுருவான். இருந்தாலும் அந்த சூப்பர்வைசேர் இவன் மேல எரிஞ்சி எரிஞ்சி விழறானாம். எதுக்கெடுத்தாலும் திட்டிகிட்டே இருக்கானாம்.ஏன்டா இப்டி எதுக்கெடுத்தாலும் கத்திகிட்டே இருக்கானு பாத்தா அந்த சூப்பர்வைசேர் பி.இ படிச்சிருக்கானாம். அந்த அதிகாரத் தோரணைய பையன்மேல மணிக்கு ஒருவாட்டி காட்டிகிட்டு இருப்பான் போலருக்கு. பையனால தாங்கிக்க முடில. அதனால வேற வேலத் தேடிட்டு இருக்கான். இன்னும் ஒண்ணும் தோதுப் படல. நீ ஏதாவது இருந்தா சொல்லு தம்பி" அடுத்த ஸ்டாப் வருவதற்குள் முத்துவிடம் சொல்லி விசில் அடித்து படிக்கட்டின் அருகில் எழுந்துச் சென்றான் ராஜன்.

மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகத்திற்குத் தாமதமாகச் சென்றான் முத்து. அங்கு மீட்டிங் அறையில் ஏற்கனவே அனைவரும்கூடி எதையெதையோ போனில் விவரித்துக் கொண்டிருந்தார்கள். மேனேஜர் கோபமாக போனை அனைத்துவிட்டு முத்துவைப் பார்த்து, "பி.இ படிச்சிருக்கான்னேனு உன்னையலாம் வேலைக்கு எடுத்தததுக்கு ஏதோ ஒரு டிகிரி படிச்சவன வேலைக்கு எடுத்துருக்கலாம். முதல்ல போய் உன் வேலைய முடி.. வேலைய முடிச்சுட்டு தான் சீட்ல இருந்து எந்துரிக்கணும்... போ.." என்று ஆங்கிலத்தில் கத்தினான்.

ஓகே சார்..!

"இவனுங்ககிட்ட லோல் படுறதுக்கு பேசாம ஒரு பொட்டிக்கட போட்டு பொழைச்சுக்கலாம் போலருக்கு" என்று மனதுக்குள் நொந்துக் கொண்டே மேனேஜர் சொன்ன அந்த வேலையைச் செய்யலானான் முத்து.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...