"நினைக்கும் போது எனக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் கேட்டுவிட வேண்டுமென்று மனது கிடையாய் கிடந்து துடிக்கிறதே. கேட்கட்டுமா.?"
கேளடி கண்மணி...!
"என்னை எக்கணத்திலிருந்து அதிகம் காதலிக்கத் தொடங்கினாய்.?"
ம்ம்ம்ம்...???????
சொல்ல விருப்பமில்லையென்றால் வேண்டாம்...
"சொல்ல கூடாதென்றெல்லாம் இல்லையடி...!"
"ஒவ்வொரு முறை நாம் உறவாடி முடித்த பின்பும், நீ என் கைகளுக்குள் சுருங்கி, மார்புக்குள் முகம் புதைந்து, சுழலும் உலகை மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாயே..! அப்போது நான் உறங்காமல் முழுமதியான உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். சில மணித் துளிகளில் என்னையறியாமல் என் கண்கள் கண்ணீரைக் கசக்கிக் கொண்டிருக்கும். அக்கண்ணீரைத் துடைக்க என் கைகள் எழாது. அதை என் கன்னங்களும் விரும்பாது. உருண்டோடும் அந்த ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் உலரும் முன், நான் முன்பை விட உன்னை அதிகமாகக் காதலிக்கத் தொடங்கியிருப்பேன்"
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment