நத்தையாய் விழிகள் நகர்கின்றன
சுவாசிக்க முடிகின்றது
கால்கள் அசைகின்றன...!
ஆக
சாகவில்லை
தற்காலிக மரணம்தான்...!
ஆந்தையாய் மனது அலையும்
புரிந்தும் புரியாதது போல
உயிரைப் போட்டு உருட்டும்...!
காட்டருவி கொட்டும் சப்தத்திலும்
கண்களை மூடினால்
சாரலின் சுகத்தில்
ஆன்மாவிற்குள் ஓர் அமைதி
பரவுமே...!
அதுபோலவே அவளது முகம்
மனமெங்கும் பரவும்
தடுத்திட முடியாது...!
வேரின் இடம் நீருக்குத் தெரிந்திருப்பது போல
நீரின் தடம் வேர் அறிந்தே இருப்பது போல
அவள் நினைவும்
என் நெஞ்சமும் ஒன்றாகும்...!
எதற்குள்
எது அடங்கியிருக்கிறது
என்றறிவது
இமைப்பதைப் போல
அவ்வளவு எளிதானது அல்ல
மண்ணில் மழைத் தொட்ட முதல் இடத்தைக்
கண்டறிவது போல கடினமானது...!
எப்புலனுக்கும் புலனாகாது...!
அந்த
நேற்றைய நினைவுகள்
உடலை இலகுவாக்கி
மனதின் எடையைக் கூட்டும்...!
குருதியோட்டம் குலைவுறும்...!
விழிகளில் காட்சிகள் பதியாமல்
வெறுமனே விழும்...!
கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில்
ஒன்றும் இருக்காது...!
கால்கள் முன்னாலும்
காலம் பின்னாலும்
உடலை முறுக்கி
உயிரைக் கட்டி இழுக்கும்...!
மெல்லிய வருடும் காற்றில்
உயிரின் ஈரம் உலரும் முன்
கண்முன் தோன்றுவாள்
கரங்களைப் பற்றி
தலையைக் கோதுவாள்...!
தோளில் சாய்த்துக் கொள்வாள்...!
கண்ணீரைத் துடைப்பாள்...!
நேற்றை மீட்டெடுப்பாள்...!
அவள் விரல்களின் வருடல் மொழியில்
என்னுடல் சிலிர்த்திருக்கும்...!
நத்தையாய் விழிகள் நகரத் தொடங்கும்
சுவாசப் பாதை சீராகும்
கால்கள் அசையும்
உயிர் பிரிந்திருக்கும்
இருப்பினும்
நான் செத்திருக்கமாட்டேன்
அது ஒரு
தற்காலிக மரணம்...!
சுவாசிக்க முடிகின்றது
கால்கள் அசைகின்றன...!
ஆக
சாகவில்லை
தற்காலிக மரணம்தான்...!
ஆந்தையாய் மனது அலையும்
புரிந்தும் புரியாதது போல
உயிரைப் போட்டு உருட்டும்...!
காட்டருவி கொட்டும் சப்தத்திலும்
கண்களை மூடினால்
சாரலின் சுகத்தில்
ஆன்மாவிற்குள் ஓர் அமைதி
பரவுமே...!
அதுபோலவே அவளது முகம்
மனமெங்கும் பரவும்
தடுத்திட முடியாது...!
வேரின் இடம் நீருக்குத் தெரிந்திருப்பது போல
நீரின் தடம் வேர் அறிந்தே இருப்பது போல
அவள் நினைவும்
என் நெஞ்சமும் ஒன்றாகும்...!
எதற்குள்
எது அடங்கியிருக்கிறது
என்றறிவது
இமைப்பதைப் போல
அவ்வளவு எளிதானது அல்ல
மண்ணில் மழைத் தொட்ட முதல் இடத்தைக்
கண்டறிவது போல கடினமானது...!
எப்புலனுக்கும் புலனாகாது...!
அந்த
நேற்றைய நினைவுகள்
உடலை இலகுவாக்கி
மனதின் எடையைக் கூட்டும்...!
குருதியோட்டம் குலைவுறும்...!
விழிகளில் காட்சிகள் பதியாமல்
வெறுமனே விழும்...!
கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில்
ஒன்றும் இருக்காது...!
கால்கள் முன்னாலும்
காலம் பின்னாலும்
உடலை முறுக்கி
உயிரைக் கட்டி இழுக்கும்...!
மெல்லிய வருடும் காற்றில்
உயிரின் ஈரம் உலரும் முன்
கண்முன் தோன்றுவாள்
கரங்களைப் பற்றி
தலையைக் கோதுவாள்...!
தோளில் சாய்த்துக் கொள்வாள்...!
கண்ணீரைத் துடைப்பாள்...!
நேற்றை மீட்டெடுப்பாள்...!
அவள் விரல்களின் வருடல் மொழியில்
என்னுடல் சிலிர்த்திருக்கும்...!
நத்தையாய் விழிகள் நகரத் தொடங்கும்
சுவாசப் பாதை சீராகும்
கால்கள் அசையும்
உயிர் பிரிந்திருக்கும்
இருப்பினும்
நான் செத்திருக்கமாட்டேன்
அது ஒரு
தற்காலிக மரணம்...!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment