இன்று படுக்கையிலிருந்து எழவே மணி பத்தாகிவிட்டது. ஒற்றை தலைவலி வேறு. ஒரு டீக்குடித்தால் தேவலாம் போலிருந்தது.
அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன்.
ஆனால் மணியாகிவிட்டது, அலுவலகத்திற்குக் கிளம்பலாமா இல்லை டீக்கடைக்குப் போலாமா.! என்ற சில நொடி யோசனையின் முடிவில் 'டீக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது' என்று எப்போதுமே எடுக்கும் நிரந்தர முடிவை முன்னெடுத்து சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கித் தெருவில் நடந்தேன்.
அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன்.
பதினைந்து அடிகள் நடந்திருப்போம். திடுமென மகனை நிற்கச் சொல்லிவிட்டு பின்னால் திரும்பி மேன்சனை நோக்கிச் சென்றார் தந்தை. மகன் நின்றார். நானும் தான். மேன்சனின் வாசலில் அமர்ந்திருந்த வயதான செக்யூரீட்டியின் கைகளில், மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து தள்ளினார். அந்தச் செக்யூரீட்டி வேண்டாமென்று எவ்வளவோ மறுக்க, அவர் பாட்டுக்குத் தாளைக் கைகளில் செருகி, அவரது இரு கைகளையும் சேர்த்தாற்போல ஒருமுறை அழுத்திப் பிடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கீழிறிங்கி வந்தார்.
\
அவருடைய கண்கள் கசிந்திருந்ததா என்று தெரியவில்லை. எந்த மனநிலையில் அவர் இருந்தார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் கவிதையைப் போலிருந்த அக்காட்சியைக் கண்ட சிலிர்ப்பில் என்னையறியாமல் எனது உதடுகள் மெல்லிய புன்னகையை உதிர்த்தன. உதிரும் புன்னகையோடு இடது ஓரத்தில் நின்றிருந்த அம்மகனைப் பார்த்தேன். ஆச்சரியமாக அவரும் என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
இருவரும் சில நொடிகள் புன்னகைத்துக் கொண்டோம்.

டீக்கடைக்கு நடந்தேன். இளம் வெயில் சாலை முழுவதையும் நனைக்க முனைந்தது. இருப்பினும் மகனின் கண்களில் மின்னிய பாசமும், பெருமிதமும் இந்நாளுக்கான நிழலை ஏற்கனவே என்னுள் பரப்பியிருந்தது.
கார்த்திக் பிரகாசம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment