அன்று குடிக்கவில்லை.
வழக்கமாக புகைக்கும் அளவிற்குக்கூட
புகைக்கவில்லை
இருந்தாலும்
உடல் அசௌகரியமாக இருந்தது.
நானே மருத்துவமனைக்குச் சென்றேன்
வெள்ளைத் தாளில் ஏதேதோ எழுதி
செவிலியரிடம் மருத்துவர் நீட்டினார்
அதெப்படி மருத்துவரின் கையெழுத்து
செவிலியர்களுக்கு மட்டும் புரிகிறது
சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார்கள்
என்னால் நடக்க முடிந்தது
இருப்பினும் சக்கர நாற்காலியில் அமர வைத்து
ஒரு செவிலியர் அழைத்துச் சென்றார்
'ஐசியு' என்றழுதப்பட்டிருந்த அறையில்
நான் படுக்க வைக்கப்பட்டேன்
அதன்பின் என்ன நடந்ததென்று தெரியவில்லை
அநேகமாக நான் இறந்திருக்கக் கூடும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment