முன்னாள் காதலனின்
திருமணத்திற்குப் பரபரப்புடன்
தயாராகிறாள் தோழி
அவனுக்குப் பிடித்த
அரக்கு வண்ணத்தில்
சேலையுடுத்தி
நிலைக் கண்ணாடியே
சோர்ந்திடுமளவிற்கு
ஒவ்வொரு மடிப்பையும்
சரிப்படுத்தி
செந்தூர பொட்டு மையமாய்
அதன் மேல் குங்கும கோட்டினை
அளந்திழுத்து
எத்தனையோ நாள்
எங்கோ பரண் மேலிருந்த
அட்டைப் பெட்டியை அவசர அவசரமாக
உயிர்ப்பிக்கிறாள்
சின்னதும் பெரியதுமாகப்
பல பரிசுப் பொருட்கள்
கடிகை
கைக்குட்டை
கால் கொலுசு
அன்னா கரினீனா புத்தகம்
ஆங்கில கவிதைகளால் நிரம்பிய
காதலிச அட்டைகள்
சுளுவில் சொல்லிவிட முடியாத
மேலும் சில
தூசாக கண்களை நெருடுகிறது
கடந்த காலம்
தூசியோடு காலத்தையும் சேர்த்து
ஊதித் தள்ளுகிறாள்
அறையெங்கும் பரவுகிறது
அந்த பழைய காதலின் வாசனை
திருமணத்திற்குப் பரபரப்புடன்
தயாராகிறாள் தோழி
அவனுக்குப் பிடித்த
அரக்கு வண்ணத்தில்
சேலையுடுத்தி
நிலைக் கண்ணாடியே
சோர்ந்திடுமளவிற்கு
ஒவ்வொரு மடிப்பையும்
சரிப்படுத்தி
செந்தூர பொட்டு மையமாய்
அதன் மேல் குங்கும கோட்டினை
அளந்திழுத்து
எத்தனையோ நாள்
எங்கோ பரண் மேலிருந்த
அட்டைப் பெட்டியை அவசர அவசரமாக
உயிர்ப்பிக்கிறாள்
சின்னதும் பெரியதுமாகப்
பல பரிசுப் பொருட்கள்
கடிகை
கைக்குட்டை
கால் கொலுசு
அன்னா கரினீனா புத்தகம்
ஆங்கில கவிதைகளால் நிரம்பிய
காதலிச அட்டைகள்
சுளுவில் சொல்லிவிட முடியாத
மேலும் சில
தூசாக கண்களை நெருடுகிறது
கடந்த காலம்
தூசியோடு காலத்தையும் சேர்த்து
ஊதித் தள்ளுகிறாள்
அறையெங்கும் பரவுகிறது
அந்த பழைய காதலின் வாசனை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment