அண்ணே
சின்னவங்களுக்கு நூறுவா
பெரியவங்களுக்கு எரநூறுவா
பத்து வயதைக் கடந்திடாத சிறுவன்
குதிரைச் சவாரிக்கு விலை பேசுகிறான்
பேரம் படிந்ததும்
குழந்தை அம்மாவுடன் குதிரையேறுகிறது
கயிற்றை வீசுகிறான் சிறுவன்
பலவற்றில் தன்னுடையதும் ஒன்றாக
குளம்படியை மணலில் பதித்தவாறு
சுணக்கமின்றி கிளம்புகிறது குதிரை
சவாரி செய்யும்
குழந்தையின் சிரித்த முகத்தையே
மெய்மறந்து பார்க்கிறான்
சிறுவன்
மணல் சிதறலில்
சிறுவனின் தொலைந்த பருவத்தை
குளம்படியில் இறைக்கிறது
குதிரை
கார்த்திக் பிரகாசம்...
சின்னவங்களுக்கு நூறுவா
பெரியவங்களுக்கு எரநூறுவா
பத்து வயதைக் கடந்திடாத சிறுவன்
குதிரைச் சவாரிக்கு விலை பேசுகிறான்
பேரம் படிந்ததும்
குழந்தை அம்மாவுடன் குதிரையேறுகிறது
கயிற்றை வீசுகிறான் சிறுவன்
பலவற்றில் தன்னுடையதும் ஒன்றாக
குளம்படியை மணலில் பதித்தவாறு
சுணக்கமின்றி கிளம்புகிறது குதிரை
சவாரி செய்யும்
குழந்தையின் சிரித்த முகத்தையே
மெய்மறந்து பார்க்கிறான்
சிறுவன்
மணல் சிதறலில்
சிறுவனின் தொலைந்த பருவத்தை
குளம்படியில் இறைக்கிறது
குதிரை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment