மூப்பின் கொட்டகையில்
ஒவ்வொரு இரவும்
கடந்த காலத்தின்
ஏதோவொரு
கனமான நாளில்
உயிரின் ஒரு துளி குருதியை
உறிஞ்சியபடி
மறுத்துப் போன வலியுடன்
விடிகின்றது
சுருங்கிய தோல்
சுண்டிய தசைகளைக்
கடந்த காலத்திடம் காட்டி
கேளிக்கை செய்கின்றது
நிகழ் பொழுது
காலம் கடந்துவிட்டதாகச்
சுருக்க ரேகைகளில்
கண்ணீர் ஊர்கையில்
இன்னுமொரு மனிதனின்
வீழ்ச்சியைக் கண்ணுற்றவாறே
கள்ள மௌனத்துடன்
பகலிரவைப் போர்த்தியபடி
நகர்கிறது காலம்
கார்த்திக் பிரகாசம்...
கடந்த காலத்தின்
ஏதோவொரு
கனமான நாளில்
உயிரின் ஒரு துளி குருதியை
உறிஞ்சியபடி
மறுத்துப் போன வலியுடன்
விடிகின்றது
சுருங்கிய தோல்
சுண்டிய தசைகளைக்
கடந்த காலத்திடம் காட்டி
கேளிக்கை செய்கின்றது
நிகழ் பொழுது
காலம் கடந்துவிட்டதாகச்
சுருக்க ரேகைகளில்
கண்ணீர் ஊர்கையில்
இன்னுமொரு மனிதனின்
வீழ்ச்சியைக் கண்ணுற்றவாறே
கள்ள மௌனத்துடன்
பகலிரவைப் போர்த்தியபடி
நகர்கிறது காலம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment