சில்லறை நாணயத்தையும்
ரூபாய்த் தாளையும் நீட்டினால்
குழந்தை கூட
ரூபாய்த் தாளையே எடுக்கின்றது
பணம் பாதாளம் வரை பாயுமே
நண்பனொருவன் கெக்கலிக்கிறான்
கண்டுகொள்ளாவிட்டாலும்
கல்லாப்பெட்டி நிறைகிறது
கடவுளுக்கு
பணம் தன்னே அதள பாதாளத்திலும் மீட்குமே
இன்னொருவன் புலம்புகிறான்
எதிலுமே ஆழ்ந்திராத
சமநிலையான பைத்தியக்கார மனதிற்கு
பணமொரு எச்சம்
உமிழ்ந்தாலும்
உட்கொண்டாலும்
எச்சம்
கார்த்திக் பிரகாசம்...
ரூபாய்த் தாளையும் நீட்டினால்
குழந்தை கூட
ரூபாய்த் தாளையே எடுக்கின்றது
பணம் பாதாளம் வரை பாயுமே
நண்பனொருவன் கெக்கலிக்கிறான்
கண்டுகொள்ளாவிட்டாலும்
கல்லாப்பெட்டி நிறைகிறது
கடவுளுக்கு
பணம் தன்னே அதள பாதாளத்திலும் மீட்குமே
இன்னொருவன் புலம்புகிறான்
எதிலுமே ஆழ்ந்திராத
சமநிலையான பைத்தியக்கார மனதிற்கு
பணமொரு எச்சம்
உமிழ்ந்தாலும்
உட்கொண்டாலும்
எச்சம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment