சமயங்களில்
என் முகம் நினைவில் நிற்காமல் போய் விடுகிறது
ஏதேதோ முகங்களைப் பொருத்தினாலும்
அது என் முகம் போலில்லை
நீண்ட நாட்களுக்குப் பின்
சந்திக்கும் நபர்
என்னைத் தெரியவில்லை எனச் சொல்வாரென்று
ஒவ்வொரு முறையும் ஊகிக்கிறேன்
சொந்த கண்களுக்குப் பழகிடாத முகம்
மூளையில் பதிய மறுக்கிறது
சில வேளைகளில் கண்ணாடியில்
தெரியும் முகம்
என்னுடையதா என சந்தேக
பிம்பம் மேல் எழும்புகிறது
எல்லாவற்றிற்கும் மேலாகச்
சிலர் என்னை உற்று நோக்கும் போது
முற்றிலும் முகமற்றவனாகி விடுகிறேன்
முகமற்றவனைத் தான்
முகமன் கூறவில்லையென்று அவர்கள்
குறையாடுகிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
ஏதேதோ முகங்களைப் பொருத்தினாலும்
அது என் முகம் போலில்லை
நீண்ட நாட்களுக்குப் பின்
சந்திக்கும் நபர்
என்னைத் தெரியவில்லை எனச் சொல்வாரென்று
ஒவ்வொரு முறையும் ஊகிக்கிறேன்
சொந்த கண்களுக்குப் பழகிடாத முகம்
மூளையில் பதிய மறுக்கிறது
சில வேளைகளில் கண்ணாடியில்
தெரியும் முகம்
என்னுடையதா என சந்தேக
பிம்பம் மேல் எழும்புகிறது
எல்லாவற்றிற்கும் மேலாகச்
சிலர் என்னை உற்று நோக்கும் போது
முற்றிலும் முகமற்றவனாகி விடுகிறேன்
முகமற்றவனைத் தான்
முகமன் கூறவில்லையென்று அவர்கள்
குறையாடுகிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment