தொடர்ந்து ஒலிக்கிறது
அந்த அழுகுரல்
நேசிக்கவும் வெறுக்கவும்
வைத்த அழுகுரல்
குழந்தையின் சிணுங்கலாய்த் தொடங்கி
அபலையின் அலறலாய் நீளும்
அழுகுரல்
விழிநீர் விசத்தில்
தோய்த்தெடுத்த வாளை
நேராய் தொண்டைக் குழியில்
இறக்கும் அழுகுரல்
கனவிலும் கேட்கும்
உடலில்லாத அழுகுரலைப்
பற்றிக் கொண்டு
நானும் அழுகிறேன்
அழுகுரல்களின் ஓலமாய்
கனக்கிறது
இரவு
கார்த்திக் பிரகாசம்...
நேசிக்கவும் வெறுக்கவும்
வைத்த அழுகுரல்
குழந்தையின் சிணுங்கலாய்த் தொடங்கி
அபலையின் அலறலாய் நீளும்
அழுகுரல்
விழிநீர் விசத்தில்
தோய்த்தெடுத்த வாளை
நேராய் தொண்டைக் குழியில்
இறக்கும் அழுகுரல்
கனவிலும் கேட்கும்
உடலில்லாத அழுகுரலைப்
பற்றிக் கொண்டு
நானும் அழுகிறேன்
அழுகுரல்களின் ஓலமாய்
கனக்கிறது
இரவு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment