நெத்தியில் பட்டையும்
கழுத்தில் கொட்டையுமாய்
காலத்தில்
திரிந்தவன் இவன்
பக்தியோ பம்மாத்தோ
அர்த்த மறியாதவற்றின்
அர்த்தங்களை
அன்றைக்கொன்றாய்
அடுக்கிவைத்து
உலவிய நாட்கள்
தெரியாததையெல்லாம்
விருப்பமில்லையென வெறுத்து
ஏமாற்றிக் கொண்ட
பகுத்தறியும் பக்குவமில்லா
பொழுதுகள்
பின்னான சிதைவுகளில்
கண்களைச் சிமிட்டி
சாட்டையை சுழட்டி
காலமாடிய கள ஆட்டத்தில்
புரிந்தது
பிடிமானமென
நினைத்ததெல்லாம்
பிசகு
கார்த்திக் பிரகாசம்...
காலத்தில்
திரிந்தவன் இவன்
பக்தியோ பம்மாத்தோ
அர்த்த மறியாதவற்றின்
அர்த்தங்களை
அன்றைக்கொன்றாய்
அடுக்கிவைத்து
உலவிய நாட்கள்
தெரியாததையெல்லாம்
விருப்பமில்லையென வெறுத்து
ஏமாற்றிக் கொண்ட
பகுத்தறியும் பக்குவமில்லா
பொழுதுகள்
பின்னான சிதைவுகளில்
கண்களைச் சிமிட்டி
சாட்டையை சுழட்டி
காலமாடிய கள ஆட்டத்தில்
புரிந்தது
பிடிமானமென
நினைத்ததெல்லாம்
பிசகு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment