Skip to main content

அப்பா என்ற ஓர் பதம்

நண்பனின் அப்பா இறந்துவிட்டார்
கைகள் நடுங்குகின்றன
குழிக்குள் சிக்கியதாய் தொண்டை
நகர முடியாமல் திணறக்
கண்கள் குளமாகின்றன
உள் வாங்கிய மூச்சு
உள்ளுக்குள்ளே ‌அடைப்பதால்
சுவாசிக்கச் சிரமமாய் இருக்கிறது
அவரை‌ பார்த்ததில்லை
அவரிடம் பேசியதில்லை
நொடியேனும் பழகியதில்லை
ஆனாலும் இத்தனைக்கும் காரணம்
'அப்பா'‌ என்ற ஓர்
பதமே

கார்த்திக் பிரகாசம்...

Comments