Skip to main content

காரணமவள்

சில கவலைகளுக்குக் காரணம் இருப்பதில்லை
அதுபோன்ற இல்லாத காரணத்தின் கவலையில்
நாள் முழுக்கத் தோய்ந்திருந்தேன்
இளம் வெயிலின் சாயலில் அருகில் வந்தாள்
உன் கவலைக்கு நான்தான் காரணமா எனக் கேட்டு
அம்மாவை தேடியழும் மழலையின் முக பாவத்தோடு
இருளில் மறையும் நிழலைப் போல் நகர்ந்தாள்
பிறகென்ன பின்னான
கவலைக்குக் காரணம் அவளாகிப் போனாள்

கார்த்திக் பிரகாசம்...

Comments