சிக்னலில் ஒரு குழந்தை
உற்றுப் பார்க்கிறது
அதன் கண்களில்
என்னவாக தெரிவேன்
நடமாடும் மரமாக
கருத்த வானமாக
நிமிர்ந்து நிற்கும் பூனையாக
கண்ணாடி அணிந்த பொம்மையாக
வண்டியோட்டும் சொப்பு சாமானமாக
புவா சாப்பிடாவிட்டால் கடத்தி
போய்விடும் பூச்சாண்டியாக
பெரிய மனிதன் வேடம்
பூண்டிருப்பவனுக்கு
அந்த உலகத்தில்
இடமே இல்லை
கண்களை விரித்து
புருவத்தை உயர்த்தி
கன்னத்தை உப்பலாக்கி
கரத்தை அலையாக்கி
சட்டென புன்னகை சிந்தியது
மீண்டதென் குழந்தைமை
சிக்னல் விழுந்தது
வண்டி புறப்பட்டது
கார்த்திக் பிரகாசம்...
உற்றுப் பார்க்கிறது
அதன் கண்களில்
என்னவாக தெரிவேன்
நடமாடும் மரமாக
கருத்த வானமாக
நிமிர்ந்து நிற்கும் பூனையாக
கண்ணாடி அணிந்த பொம்மையாக
வண்டியோட்டும் சொப்பு சாமானமாக
புவா சாப்பிடாவிட்டால் கடத்தி
போய்விடும் பூச்சாண்டியாக
பெரிய மனிதன் வேடம்
பூண்டிருப்பவனுக்கு
அந்த உலகத்தில்
இடமே இல்லை
கண்களை விரித்து
புருவத்தை உயர்த்தி
கன்னத்தை உப்பலாக்கி
கரத்தை அலையாக்கி
சட்டென புன்னகை சிந்தியது
மீண்டதென் குழந்தைமை
சிக்னல் விழுந்தது
வண்டி புறப்பட்டது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment