இன்று அதிகாலை வரை நடமாடிய
சனங்களில் ஒன்று
சவமாகிக் கிடக்கிறது
ஊரே கூடியது
ஓலக்கூரையும் ஓட்டையில்
கண்ணீரை ஒழுகவிடும்
வேடிக்கை பார்ப்பவனும்
வோவென வெடித்துக் கதறும்
ஒப்பாரி ஓலங்கள்
வேதனையை வீசி
அயர்ந்தன கிளைகள்
புலம்பலை ஊற்றி
மூழ்கின நேரங்கள்
கிழிந்த ஆடையில்
நைந்த முகத்தில் சடுதியில்
வந்தான் ஒருவன்
கையில் மாலை இல்லை
முகத்தில் சோகக் கண்ணீர் இல்லை
பழுத்த இலை உதிர்வதைப் போன்ற
முதிர் சிரிப்பில் சவமாய் கிடக்கும்
பிண்டத்தை வணங்கிய அவன்
வெடுவெடுவென நகர்ந்து மறைந்தான்
வெயில் அப்பிய அவன் முகத்தில்
சவத்தின் சாயல் இருந்ததை
நான் மட்டுமே
பார்த்தேன்
கார்த்திக் பிரகாசம்...
ஊரே கூடியது
ஓலக்கூரையும் ஓட்டையில்
கண்ணீரை ஒழுகவிடும்
வேடிக்கை பார்ப்பவனும்
வோவென வெடித்துக் கதறும்
ஒப்பாரி ஓலங்கள்
வேதனையை வீசி
அயர்ந்தன கிளைகள்
புலம்பலை ஊற்றி
மூழ்கின நேரங்கள்
கிழிந்த ஆடையில்
நைந்த முகத்தில் சடுதியில்
வந்தான் ஒருவன்
கையில் மாலை இல்லை
முகத்தில் சோகக் கண்ணீர் இல்லை
பழுத்த இலை உதிர்வதைப் போன்ற
முதிர் சிரிப்பில் சவமாய் கிடக்கும்
பிண்டத்தை வணங்கிய அவன்
வெடுவெடுவென நகர்ந்து மறைந்தான்
வெயில் அப்பிய அவன் முகத்தில்
சவத்தின் சாயல் இருந்ததை
நான் மட்டுமே
பார்த்தேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment