இரவே சுயம் மறந்துறங்கும் அர்த்த ராத்திரியில் பசியால் வீறிடுகிறது
தூளியில் மிதக்கும் குழந்தை
செவிடாய் இருப்பினும் கேட்டுவிடும் போலக்
குழந்தையின் அழுகை அன்னைக்கு
பாரமிழந்த உடலின் எடையை மீட்டினாள்
தொட்டிலில் மிதந்த குழந்தை அடுத்த நொடி
அவளின் தொடைகளின் மேல் மீண்டது
உள்ளாடை அணியாத சௌகரியத்தால்
எளிதில் திறந்து காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள்
அனிச்சையாய்
இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை
குழந்தையும் கூட
குழந்தையின் எச்சிலில் மயிர்க்கூச்செறிய விரைத்த காம்பு
பாலமுதை பாய்ச்சியது
சிலிர்த்த உடலைச் சீர்செய்யக் கண் விழித்தாள்
கண்களைத் திறவாமல் உதட்டினை மட்டும் நமுட்டி
உணவினை உறிஞ்சும் குழந்தை அதிசயம்
ஊறிக் கொண்டிருக்கும் மார்பில் ஊறியது
உதடுகளால் மென் கன்னங்களால்
பசியாறிய குழந்தையைத் தொட்டிலில் இட்டாள்
சுளீர் சுளீரென உள்ளிழுத்த பால் கனத்த மார்பின் வலி
குழந்தைக்கு எப்படித் தெரிந்திருக்கும்
பாரம் தீர்ந்த வலி கண்ணீராய்ச் சொட்டியது
கனத்த இரவை இலகுவாக்கி
கார்த்திக் பிரகாசம்...
செவிடாய் இருப்பினும் கேட்டுவிடும் போலக்
குழந்தையின் அழுகை அன்னைக்கு
பாரமிழந்த உடலின் எடையை மீட்டினாள்
தொட்டிலில் மிதந்த குழந்தை அடுத்த நொடி
அவளின் தொடைகளின் மேல் மீண்டது
உள்ளாடை அணியாத சௌகரியத்தால்
எளிதில் திறந்து காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள்
அனிச்சையாய்
இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை
குழந்தையும் கூட
குழந்தையின் எச்சிலில் மயிர்க்கூச்செறிய விரைத்த காம்பு
பாலமுதை பாய்ச்சியது
சிலிர்த்த உடலைச் சீர்செய்யக் கண் விழித்தாள்
கண்களைத் திறவாமல் உதட்டினை மட்டும் நமுட்டி
உணவினை உறிஞ்சும் குழந்தை அதிசயம்
ஊறிக் கொண்டிருக்கும் மார்பில் ஊறியது
உதடுகளால் மென் கன்னங்களால்
பசியாறிய குழந்தையைத் தொட்டிலில் இட்டாள்
சுளீர் சுளீரென உள்ளிழுத்த பால் கனத்த மார்பின் வலி
குழந்தைக்கு எப்படித் தெரிந்திருக்கும்
பாரம் தீர்ந்த வலி கண்ணீராய்ச் சொட்டியது
கனத்த இரவை இலகுவாக்கி
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment