சிறுவயதில் சினிமாவிற்குக் கூட்டிச் செல்ல அம்மாவிடம் அடம் பிடிப்பேன்.. கண்டபடி அழுவேன். அழுதுக் கொண்டே இருப்பேன்.. முதுகில் இரண்டு அடி பட்டும் படாதவாறு வைத்து விடுவாள். உடனே நான் இன்னும் பலமாக அழ ஆரம்பிப்பேன்.. நான் அழுவதை பார்த்துவிட்டு, "சரி. வெள்ளிக்கிழம சாயந்தரம் கூட்டிப் போறேன் அழாதே என்பாள்".. அப்பா கண்டபடி திட்டுவார்.. சும்மா காத்தாதீங்க "பையன் பொக்குனு போய்டுவான்". நீங்க ஒன்னும் காசு தர வேணாம்" என்று சொல்லிவிட்டு என்னை அவசர அவசரமாக இழுத்துச் செல்வாள். "கண்ணு, அடுத்த மொற வீட்டுக்கு வரும் போது என்ன சினிமாவுக்குக் கூட்டிப் போறியா..? தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு..." இன்று அம்மா அடம் பிடிக்காமல் என்னிடம் கேட்கிறாள்.. நான் வளர்ந்துவிட்டேன்...!!! அவள் குழந்தையாகி விட்டாள்...!!! கார்த்திக் பிரகாசம்...