ஒரு திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கையர்களின் வாழ்க்கைப் பதிவுகள் தான் "உணர்வும் உருவமும்".
அது மட்டுமில்லாமல், திருநங்கைகளுக்காக இயங்கும் தன்னார்வ அமைப்புகள் வளர்ந்து வரும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு பற்றியும் விளக்கி இருக்கிறார்.
இப்புத்தகம், திருநங்கைகளின் மீது கருணையை, பரிவை எதிர்பார்க்கும் முனைப்புடன் இல்லை. மாறாக அவர்களும் ஆண் பெண் போல மனித உயிர்கள்; அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது..
தங்களை அரவாணி (அ) திருநங்கை என்று உணர்ந்த தருணத்தில் இருந்து அவர்கள் மீது கொட்டப்படும் சமூக அவமானங்கள், சக நண்பர்களின் ஏளனங்கள், பெற்றோரே துரத்தி அடிப்பது, என் பிள்ளையே இல்லை என்று தூற்றுவது. உடன் பிறந்தவர்கள் சொத்தில் பங்கில்லை என்று ஏமாற்றுவது, சக அரவாணிகளைத் தேடி அலைவது, பாலியல் தொந்தரவுகள்,பாலியல் கொடுமையில் அறியாமல் சிக்கிக் கொள்வது பின்பு நினைத்தாலும் மீள முடியாமல் தவிப்பது என ஒவ்வொரு சூழ்நிலையையும் சம்மந்தப்பட்டவர்களின் அனுபவங்களின் மூலமாக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் திருநங்கை ரேவதி.
அது மட்டுமில்லாமல், திருநங்கைகளுக்காக இயங்கும் தன்னார்வ அமைப்புகள் வளர்ந்து வரும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு பற்றியும் விளக்கி இருக்கிறார்.
இப்புத்தகம், திருநங்கைகளின் மீது கருணையை, பரிவை எதிர்பார்க்கும் முனைப்புடன் இல்லை. மாறாக அவர்களும் ஆண் பெண் போல மனித உயிர்கள்; அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment