Skip to main content
கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் காலம் வரையில், அம்மா தான் சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார்...

அம்மாவுடன் சேர்ந்து பார்த்த திரைப்படங்களையோ அல்லது அத்திரைப்படத்தின் பாடல்களையோ எதேச்சையாக இப்பொழுது பார்க்க நேரும் போது மனதின் ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் துளி துளியாய் சிதறிக்கிடக்கும் அந்தப் பழைய நினைவுகள் ஒன்றாக சேர்ந்து நினைவு மாலையைக் கோர்க்கின்றன...

2000களில் வெளிவந்த படங்களின் பாடல்களை கேட்கும் போது அம்மாவின் ஞாபகமும் பழைய நினைவுகளும், மண்ணில் விழுந்த முதல் மழைத் துளி மறைந்துக் கிடைக்கும் மகத்தான மண் வாசத்தை வெளிக்கொணர்வது போல மனதை ஆக்கிரமிக்கின்றன.

"படையப்பா" படத்தின் போது "ரஜினி ரஜினி தான்" என்று ரஜினிகாந்த்திற்குப் பாராட்டு பத்திரம் வாசித்ததும், "ஷாஜஹான்" படத்தின் முடிவை பார்த்து "விஜய்க்கு கண்ணீரோடு ஆறுதல்" சொல்லியதும், "ஆனந்தம்" படத்தில் "மம்முட்டியை ரம்பா ஜாடையாக பேசும் போது" உனக்கென்னடி அவன பத்தி தெரியும் என்று ரம்பாவைத் திட்டியதும், 7ஜி ரெயின்போ காலனி படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், " ஏன்டா இந்தப் படத்திற்கு போனோம்" என்று புலம்பியதும், அலைபாயுதே படத்தில் சிநேகிதனே பாடலின் போது, "அம்மா, ஷாலினி கழுத்தில் இருக்கும் தாலி, மாதவன் கட்டியதா இல்லை அஜித் கட்டியதா என்று நான் அறியாமல் கேட்டபோது சிரித்ததும், போக்கிரி பொங்கல் பாட்டிற்கு தியேட்டரில் திரைமுன் ஆடுபவர்களோடு என்னையும் ஆடச் சொல்லியதும், சச்சின் படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து சிரித்து மகிழ்ந்ததும், தவசி படம் பெரிய தியேட்டரில் ஓடுகிறது " டிக்கெட்டிற்கு அப்பா கொடுத்த காசு பத்தாது" என்று வெயிலில் ஐந்தாறு கிலோமீட்டர் நடந்தே சென்று வந்ததும், மழை வரும் என்று தெரிந்தும் அதற்குள் சீக்கிரம் போய்விடலாம் என்று கிளம்பி மழையில் முழுவதுமாக நனைந்து, தியேட்டர் ஏசியில் நடுங்கிக் கொண்டே "ஆட்டோகிராப்' படம் பார்த்ததும், "மைனா" திரைப்படத்திற்கு நம்மோடு என் தோழி முதன் முறையாக வந்த போது "அப்பாவிற்கு தெரிந்தால் பயங்கரமாக திட்டுவாரே" என்று படம் முடிந்து நாம் வீடு திரும்பும் வரை "நீ பயந்துக் கொண்டே இருந்ததும்", "திருப்பாச்சி" படத்தில் "என்ன தவம் செஞ்சுபுட்டோம் அண்ணன் தங்கை ஆயிப்புட்டோம்" பாடலின் போது "பொண்ணா பொறந்தா இதான் நெலம" என்று கண்ணீர் சிந்தியதும், "தவமாய் தவமிருந்து" படத்தில் சேரன் முதன்முறையாக கோபிகாவையும் குழந்தையையும் வீட்டிற்கு கூட்டி வரும் போது "சரண்யா குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு அழுததை விட நீ அதிகமாக அழுததும்", "பாளையத்து அம்மன்" படத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை காட்சிக்கு சென்றிருந்த போது, "ஆடி வந்தேன் ஆடி வந்தேன்" பாடலுக்கு தியேட்டர் முழுவதும் சாம்பிராணி புகைப் போட்டதும் திடீரென்று முன் வரிசையில் இருந்த நான்கைந்து பெண்கள் சாமி வந்தது போல் ஆக்ரோஷமாக ஆடியதும் அதை பார்த்து உன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நான் பயந்ததும், "சந்திரமுகி" திரைப்படத்தில், ஜோதிகா கங்காவாக மாறி கட்டிலைத் தூக்கும் போது "நான் உன் முந்தானைக்குள் ஒளிந்துக் கொண்டதும்" என பசுமையான நினைவுகள் ஆகாயம் போல் விரிகின்றன. மீண்டுமொரு முறை "அந்த நாட்கள் வாழ்வில் வாராதா" என்ற ஏக்கம் அடைய வைக்கின்றன...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...