காலையில் தோழி ஒருத்தி தன் திருமணத்திற்கு சொல்வதற்காக அழைத்திருந்தாள்.. அவளிடம் பேசி நீண்ட வருடம் ஆகியிருந்ததால் மகிழ்வுடன் அலைபேசியை எடுத்தேன். வழக்கமான வாழ்த்துக்கள் பறிமாறியப் பின், திருமணத்திற்குப் பிறகு எங்கு குடியேறப் போகிறாய் சென்னையா பெங்களூரா ..? என்று கேட்டேன்.
அதற்கு அவள் சேலத்திலேயே (சொந்த ஊர்) தான் என்றாள். எனக்கு அலாதியான மகிழ்ச்சி. திருமணத்திற்குப் பிறகும் நீ சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறாய் என்றால், நீ மிகவும் அதிர்டசாலி என்று வாழ்த்துச் சொல்லினேன்.. உண்மையில் அலைப்பேசியை துண்டித்தப் பிறகும், அவள் திருமணத்திற்கு அழைத்ததை விட, சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறேன் என்று கூறியது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது..
இன்றையச் சுழலில், பெரும்பாலான குடும்பத்தில் "முதல் பட்டதாரி என்ற பெருமையுடன்" பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துவிட்டு வேறு வழியில்லாமல் அங்கேயே நிரந்தரமாக குடியேறியும் விடுகின்றனர்.. அதன் பிறகு குழந்தை குட்டியென பூர்விகமே மாறிவிடுகிறது. இது காலம்காலமாக நடத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் முன்பை விட இப்பொழுது எண்ணிகையில் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
"சொந்த ஊரில் திருவிழா, உறவினரின் திருமணம், குடும்ப தலைக்கட்டில் முக்கியஸ்தர் மரணம்" போன்ற சொந்தமெல்லாம் ஓரிடத்தில் கூடும் முக்கிய நிகழ்வுகளுக்குக் கூட "விடுமுறை இல்லை" என்று பிழைப்புத் தேடி வந்த தலைமுறை பிடிவாதமாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..
அவ்வாறு குடியேறுபவர்களின் பெற்றோரின் ஏக்கங்களை யார் நிறைவேற்றுவார்கள். அவர்கள் நோய்வாய்ப் படும் காலத்தில் யார் உடனிருந்து பார்த்துக் கொள்வார்கள்..
சொந்த ஊரில் தனித்தனியாக இருந்தாலும் பக்கத்து சந்தில் பெரியம்மா வீடு, அடுத்த தெருவில் மாமா வீடு, நினைத்தால் போய்ட்டு வரும் தூரத்தில் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி என சொந்தங்கள் கூடி இருக்கும். இங்கு இரண்டு வீடு தள்ளி யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சொந்தப் பந்தங்களின் வாசமே இல்லாமல், தாத்தா பாட்டியின் பாசமே அறியாமல், சொந்த ஊரின் மகிமையே தெரியாமல் ஒரு தலைமுறையினர் இன்று தலைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர்..
அலைபேசியில் மட்டும் தாத்தா பாட்டி சொந்தப் பந்தங்களுடன் பேசி, அலைபேசியில் மட்டும் பாசத்தை பகிர்ந்துக் கொண்டு, அலைபேசியில் மட்டும் மழை வந்தாதா வெயில் அடித்ததா என்றுக் கேட்டு கொண்டு, அலைபேசியில் மட்டும் ஏக்கங்களையும் ஒரு சில கண்ணீர்த் துளிகளையும் சிந்தி விட்டு மற்ற நேரத்தில் கண்டுக்கொள்ளாமல், சொந்தபந்தங்களின் நினைவை அனைத்து வைக்க, அது ஒன்றும் அலைபேசியில் இருக்கும்
"மொபைல் டேட்டா" அல்ல.
சொந்த ஊர் பாசம், சொந்தக்காரர்களின் மீதான நேசம் என்பதெல்லாம் வெள்ளிக்கிழமை இரவு தோன்றி ஞாயிற்றுக் கிழமை நடுராத்திரியில் மறைந்து விடும் கனவாக மாறி வருகிறது.
திருமணத்திற்கு பிறகும், சொந்த ஊரில் சொந்தங்களுடன் வாழ வாய்ப்பு அமைந்தவர்கள் பாக்கியசாலிகள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment