மணி சரியாக மதியம் 1.30. உச்சி வெயில் உடலெங்கும் வெப்பத்தை பரப்பிக் கொண்டிருந்தது. வியர்வையால் தன் அடையாள நிறத்தை இழந்திருந்தது அவனுடைய சட்டை. வேட்டியில் அங்கங்கு கிழிசல்கள். செருப்புகள் தேய்ந்து போய் தன் உயிரை ஈன்றுவிடும் நிலையில் இருந்தன.
காலை சாப்பாடே ஆகாத நிலையில் மதிய வெயிலில் அவனுடைய பசி,
உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தது. கால்கள் நடுங்க தொடங்கின. மரத்தில் சாய்ந்தவாறே ரோட்டில் உட்கார்ந்துவிட்டான் சேகர்.
மகன்களுக்குள் தந்தையை யார் பார்த்து கொள்வது என்ற பிரச்சனை. "அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு மொத்த செலவையும் நான் தானே செய்தேன். ஆதலால், இவரை நீ கடைசி வரை பார்த்துக் கொள்.. நான் என் குடும்பத்தையும் இனிமேல் பார்க்க வேண்டும்" என்றான் பெரியவன். "உன்னை பல லட்சங்களை செலவு செய்து படிக்க வைத்தார். எனக்கென்று என்ன செய்தார். எதாவது செய்திருந்தால் நானும் உன்னைப் போல் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து நாலு பணம் காசு சேர்த்திருப்பேன். இப்பொழுது என் கையில் என்ன இருக்கிறது. என் குடும்ப செலவையே என்னால் ஈடு செய்ய முடியவில்லை. இதில் இவரின் மருந்து மாத்திரை செலவெல்லாம் யாரால் முடியும். ஆதலால் நீயே பார்த்துக் கொள்" என்றான் சிறியவன்..
தன் காதுப்படவே மகன்கள் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் தர்ம சங்கடம் அடைந்த சேகர், அடுத்த நாளே யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்..
இந்த நிமிடம் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. இத்தனை நாள் அப்படி இப்படி என்று எப்படியோ சமாளித்து விட்டான். ஆனால் இன்று முடியவில்லை. பசி வாட்டி வதைத்தது.. பசி அவனை பிச்சை எடுக்கவும் தூண்டியது.
சுற்றும் முற்றும் பார்த்தான். சேகரின் அருகில் ஒருவரும் இல்லை...
கார்த்திக் பிரகாசம்...

ஒரு மாதம் முன்பு வரை சேகரின் நிலைமையே வேறு. அன்பான மனைவி. பாசமாக வளர்த்து ஊரே மெச்சும் அளவிற்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து வைக்கப்பட்ட இரு மகன்கள் என மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்த நாட்கள், அவன் மனைவியின் திடீர் மரணத்தால் எல்லாம் மாறியது.
மகன்களுக்குள் தந்தையை யார் பார்த்து கொள்வது என்ற பிரச்சனை. "அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு மொத்த செலவையும் நான் தானே செய்தேன். ஆதலால், இவரை நீ கடைசி வரை பார்த்துக் கொள்.. நான் என் குடும்பத்தையும் இனிமேல் பார்க்க வேண்டும்" என்றான் பெரியவன். "உன்னை பல லட்சங்களை செலவு செய்து படிக்க வைத்தார். எனக்கென்று என்ன செய்தார். எதாவது செய்திருந்தால் நானும் உன்னைப் போல் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து நாலு பணம் காசு சேர்த்திருப்பேன். இப்பொழுது என் கையில் என்ன இருக்கிறது. என் குடும்ப செலவையே என்னால் ஈடு செய்ய முடியவில்லை. இதில் இவரின் மருந்து மாத்திரை செலவெல்லாம் யாரால் முடியும். ஆதலால் நீயே பார்த்துக் கொள்" என்றான் சிறியவன்..
தன் காதுப்படவே மகன்கள் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் தர்ம சங்கடம் அடைந்த சேகர், அடுத்த நாளே யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்..
இந்த நிமிடம் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. இத்தனை நாள் அப்படி இப்படி என்று எப்படியோ சமாளித்து விட்டான். ஆனால் இன்று முடியவில்லை. பசி வாட்டி வதைத்தது.. பசி அவனை பிச்சை எடுக்கவும் தூண்டியது.
கண்ணீரைத் துடைத்து கொண்டு, நடுங்கிய கால்களுடன் எழுந்து யாரிடமாவுது பிச்சை கேட்கலாம் என்று இரண்டு மூன்று நடை எடுத்து வைத்தான். நடக்க முடியாமல் தடுமாறி விழுந்தான்.. மூக்குக் கண்ணாடி
சிறிது தூரம் கடந்து விழுந்தது.
உட்கார்ந்துக் கொண்டே கண்ணாடியை எடுக்க நீட்டிய அவனுடைய கையில் ஐம்பது ருபாய் தாள் ஒன்று கிடைத்தது.
சிறிது தூரம் கடந்து விழுந்தது.
உட்கார்ந்துக் கொண்டே கண்ணாடியை எடுக்க நீட்டிய அவனுடைய கையில் ஐம்பது ருபாய் தாள் ஒன்று கிடைத்தது.
சுற்றும் முற்றும் பார்த்தான். சேகரின் அருகில் ஒருவரும் இல்லை...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment