கூடி இணைந்து அன்பால் கட்டமைக்கப்பட்ட "கூட்டுக் குடும்பம்" என்ற வாழ்க்கை முறை, இன்றைய சூழ்நிலையில் சின்னாபின்னமாய் சிதறி
"தனிக் குடும்பமாகவும்" "தனி மனிதர்களாகவும்" திரிந்து விட்டதை மிகுந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் தமிழருவி மணியன்... கூடி வாழ்வதன் அவசியத்தையும் கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் உணர்த்துகிறார். வயதான தாய் தந்தையரை பேணிக்காப்பதை பெரும் கடமையாக கொண்டிருந்த நம் சமூகத்தில், இன்று அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை கண்டு கவலை கொள்ள வைக்கிறார். தாய் தந்தையரை பேணிக்காத்த புராண கதைகள், கவிதைகள் என ஒவ்வொரு வரியிலும் யோசிக்க வைக்கிறார்.
கார்த்திக் பிரகாசம்...

அன்பு காட்டுவதன் நோக்கத்தை, கூட்டுக் குடும்பமாய் வாழ வேண்டிய அவசியத்தை, தாய்மையின் மேன்மையை, ஆன்மிக சிந்தனைகளை மிகுந்த சிரத்தையுடன் புராண கதைகள், சங்ககால இதிகாசங்கள், மேல்நாட்டு அறிஞர்களின் கவிதைககள், பாரதி மற்றும் பாரதிதாசனின் புரட்சி கவிதைகள் மூலம் சமூக அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார்.
பொருளாதாரத்தை மட்டும் மையமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தை, மிகுந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் திரும்பி பார்க்க வைக்கும் இந்தப் புத்தகம்.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்...

Comments
Post a Comment