சிறுவர்கள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். "சேவ் டிரஸ்ட்" என்ற அமைப்பு வட சென்னையின் பல பகுதிகளில் விரிந்துள்ள அம்பேத்கர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து எவ்வித தங்குதடையுமின்றி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சேவ் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் இச்செயல்களை முன்னின்று செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் பாடரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயன் பெறுகின்றனர். பள்ளிப்பாட...